கேப்டன் கோலியை தூக்கி கெத்து காட்டிய அனுஷ்கா ஷர்மா; வைரல் வீடியோ

திருமணத்துக்குப் பிறகும், ஹீரோயின் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் அனுஷ்கா ஷர்மா தொடர்ந்து நடித்து வந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா அலேக்காக தூக்கி கெத்து காட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமுக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து 2017ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகும், ஹீரோயின் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் அனுஷ்கா ஷர்மா தொடர்ந்து நடித்து வந்தார். அதுமட்டுமல்லாமல், சில வெப் சீரிஸ்களையும் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார்.

இதனிடையே, கடந்த ஆண்டு கர்ப்பமான அனுஷ்கா சர்மா கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்த வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அனுஷ்கா ஷர்மா நிறைமாத கர்ப்பினியாக இருந்த நேரத்தில்தான், ஆஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் விளையாட சென்ற விராட் கோலி அனுஷ்காவின் பிரசவத்தை தொடர்ந்து, தொடரை முடிக்காமலே இந்தியா திரும்பினார். இதனைத் தொடர்ந்து, அனுஷ்கா ஷர்மாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா தங்களுடைய செல்ல மகளுக்கு வாமிகா என்று பெயர் வைத்துள்ளதாக தெரிவித்தனர். ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், நடிகை அனுஷ்கா ஷர்மா தனது கணவர் விராட் கோலியை அலேக்காக தூக்கியபோது எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அனுஷ்கா ஷர்மா கேப்டன் வீராட் கோலியை பின்னால் நின்று இரு கைகளால் சேர்த்து பிணைத்து அலேக்காக தூக்குகிறார். பிறகு, விராட் கோலியை தூக்கிவிட்டதாக அனுஷ்கா ஷர்மா கைகளை உயர்த்தி கெத்து காட்டுகிறார். இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actress anushka sharma lifts captain virat kohli video goes viral

Next Story
கர்ணன் இன்று ரிலீஸ்; அரசு விதிமுறைக்கு உட்படுவோம்: தாணு உறுதி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express