/tamil-ie/media/media_files/uploads/2020/01/a27-1.jpg)
actress Bhama announces her engagement to marry businessman - 'எல்லாம் அவன் செயல்' - பிரபல தமிழ் நடிகைக்கு நிச்சயதார்த்தம்; மாப்பிள்ளை யார் தெரியுமா?
கடந்த 2007ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நிவேத்யம் என்ற படத்தின் மூலம் கேரள திரையுலகில் நுழைந்தவர் நடிகை பாமா. இவரது இயற்பெயர் ரெகிதா ராஜெந்திர குருப்.
தொடர்ந்து, 'எல்லாம் அவன் செயல்' படம் மூலம் கோலிவுட்டில் கால் பதித்த பாமா, சேவற்கொடி, ராமானுஜம் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.
கடைசியாக மலையாளத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான மறுபடி என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சில கன்னட திரைப்படங்களிலும் நடித்துவந்தார்.
இந்நிலையில் நடிகை பாமாவுக்கு ஆலப்புழாவை சேர்ந்த அருண் என்ற தொழிலதிபர் ஒருவருடன் நேற்று (22.01.2020) நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இத்தகவலை பாமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உறுது செய்துள்ளார்.
பாமா அக்கா கணவரின் நெருங்கிய நண்பராம் அருண். கனடாவில் படித்த அருண் சொந்தமாக தொழில் துவங்கி நடத்தி வருகிறார். திருமணத்திற்கு பிறகு பாமா படங்களில் நடிப்பாரா என்பது தெரியவில்லை.
பாமா, அருணுக்கு இந்த மாத இறுதியில் கொச்சியில் திருமணம் நடைபெற உள்ளது. இது பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணமாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.