உதவி இயக்குனரை உருகி, உருகி காதலித்த சூப்பர் ஸ்டார்; திருமணமாகி குடிசை வீட்டில் வாழ்க்கை: ரீ-என்ட்ரியில் அசத்தியவர் இந்த நடிகை!

இசையை மட்டுமன்றி, நடிப்பிலும் தனது திறமையை வெளிப்படுத்த விரும்பிய பானுமதி, தனது முதல் படத்தில் வாய்ப்பு பெற்றதும், அதனை வெற்றியாய் பயன்படுத்திக் கொண்டார்.

இசையை மட்டுமன்றி, நடிப்பிலும் தனது திறமையை வெளிப்படுத்த விரும்பிய பானுமதி, தனது முதல் படத்தில் வாய்ப்பு பெற்றதும், அதனை வெற்றியாய் பயன்படுத்திக் கொண்டார்.

author-image
WebDesk
New Update
Screenshot 2025-09-12 003816

செப்டம்பர் 7, 1925 அன்று, இன்றைய ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள தொத்தாவரம் என்னும் ஒரு சிறிய அழகான கிராமத்தில், பொம்மராஜூ வெங்கடசுப்பையா மற்றும் அம்மனியம்மா தம்பதியினருக்கு பானுமதி எனும் பெண் பிறந்தார். சிறுவயதிலேயே இசையில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டிருந்த பானுமதிக்கு, அவரது தந்தை கர்நாடக இசையை முறையாக கற்றுத் தந்தார். "என் மகளின் குரல் இந்தியா முழுவதும் ஒலிக்க வேண்டும்" என்ற கனவை அவரது தந்தை பொம்மராஜூ கொள்வது தவிர, அதற்காக எவ்வாறான தியாகத்தையும் செய்யத் தயாராக இருந்தார்.

Advertisment

இசையை மட்டுமன்றி, நடிப்பிலும் தனது திறமையை வெளிப்படுத்த விரும்பிய பானுமதி, தனது முதல் படத்தில் வாய்ப்பு பெற்றதும், அதனை வெற்றியாய் பயன்படுத்திக் கொண்டார். அந்த வெற்றியைத் தொடர்ந்து, மாலதி மாதவன், தர்மபத்தினி உள்ளிட்ட பல முக்கியமான தெலுங்குப் படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகி, ரசிகர்களின் மனங்களில் நிலையான இடம் பெற்றார்.

அவர் நடிப்புக்காக சென்னை வந்தபோது, அங்கு உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருந்த பலுவை ராமகிருஷ்ணா என்பவரை சந்தித்தார். அந்தச் சந்திப்பு, நெடுநாள் தொடரும் ஒரு உறவுக்கு தொடக்கமாகியது. இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து கொண்டனர், காதல் வளர்ந்தது. பிறகு குடும்பத்தினரின் ஆசீர்வாதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களது வாழ்க்கைதான் பின்னாளில் தெலுங்கு திரைத்துறையின் மிக முக்கிய ஜோடிகளில் ஒன்றாக விரிந்தது.

பானுமதியின் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு – ஒரு பெண் தனது இசை, நடிப்பு, கல்வி, குடும்பம் ஆகியவற்றை சமநிலையுடன் ஏற்றி வைத்துக் கொண்டு, தனக்கான அடையாளத்தை உலகிற்கு உரக்கச் சொன்னவளாக அமைந்தார்.

Advertisment
Advertisements

பானுமதி நடித்த முதல் படமே மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த பானுமதி 1943-ம் ஆண்டில் ‘கிருஷ்ண பிரேமா’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார். தனது காதல் கணவரான ராமகிருஷ்ணாவை அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போதுதான் முதன்முதலாக சந்தித்தார் பானுமதி. முதல் சந்திப்பிலேயே பானுமதியின் கவனத்தை ஈர்த்தார் ராமகிருஷ்ணா. படப்பிடிப்பு தளத்தில்  ஓடி, ஆடி வேலை செய்து கொண்டிருந்த அந்த சுறுசுறுப்பான, அழகான வாலிபன் யார் என்று விசாரித்துத் தெரிந்து கொண்ட அவர் படப்பிடிப்பு  இடைவேளைகளில் வைத்த கண் வாங்காமல் அவரையே பார்த்துக் கொண்டிருக்கத் தொடங்கினார்.

அந்தப் படத்தைவிட பானுமதிக்கு  ராமகிருஷ்ணா மேல் இருந்த காதல் வேகமாக வளர்ந்தது. இதில் மிகப் பெரிய வேடிக்கை என்வென்றால் படத்தின் நாயகியான பானுமதி தன்னைக் காதலித்துக் கொண்டிருக்கிறார் என்பதைப் பற்றி அந்த ராமகிருஷ்ணாவுக்குக் கொஞ்சம்கூட தெரியாது. அப்போது பானுமதி பருவ வயதிலிருந்ததால் அவரது தந்தை அவருக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினார். இனியும் தனது காதலைப் பற்றி வீட்டில் சொல்லாமல் இருப்பது சரியல்ல என்று எண்ணிய பானுமதி தனது மூத்த சகோதரியிடம் தான் ராமகிருஷ்ணா என்ற உதவி இயக்குநரைக் காதலிக்கின்ற விவரத்தைக் கூறினார்.

பானுமதியின் காதல் விவகாரம் தெரிந்ததும் எல்லா  அப்பாக்களையும் போல பானுமதியின் அப்பாவான வெங்கட சுப்பையாவும் ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதித்தார். அந்தக் கல்யாணம் நடக்கவே நடக்காது என்றார். சினிமாவில் பணிபுரியும் ஒருவருக்கு தனது மகளைத் திருமணம் செய்து கொடுப்பதில் அவருக்கு ஒரு சதவிகிதம்கூட உடன்பாடில்லை. ஆனால் பானுமதி தான் எடுத்த முடிவில் உறுதியாக நின்றதால் வேறு வழியின்றி  திருமணம் பற்றி பேச ராமகிருஷ்ணாவை தனது வீட்டுக்கு அழைத்தார் பானுமதியின் தந்தை.

பானுமதி எப்படிப்பட்ட பண்பான நடிகை  என்பதை அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது அவர் நன்கு அறிந்திருந்தார். ஆகவே அவர் தன்னைக் காதலிக்கிறார் என்பது தெரிந்ததும் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. பானுமதியை மனைவியாக ஏற்றுக் கொள்ள அவர் பெரிதும் விரும்பினார் என்றாலும்   அதற்கு சில நிபந்தனைகளை விதித்தார்.

படப்பிடிப்பின் போது பானுமதியின் பண்பைக் நன்கு அறிந்திருந்த ராமகிருஷ்ணா, தன்னை காதலிக்கிறாள் எனத் தெரிந்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அவரை மனைவியாக ஏற்க விரும்பினாலும், சில நிபந்தனைகள் வைத்திருந்தார்.

"முதலில் என்னுடைய நிபந்தனைகள் என்னென்ன என்பதை உங்களுக்குச் சொல்கிறேன் . அவை எல்லாம்  உங்களுக்கு ஒத்து வருமா என்று பாருங்கள் என்று சொல்லிவிட்டு தனது நிபந்தனைகளைப் பட்டியலிடத் தொடங்கினார் அவர். என்னைத் திருமணம் செய்து கொண்ட பிறகு உங்களது பெண் கச்சேரிகளில் பாடவோ, சினிமாவில் நடிக்கவோ கூடாது. இவை எல்லாவற்றிற்கும் அறவே முற்றுப் புள்ளி வைத்துவிட வேண்டும் என்று அவர் சொன்னவுடன் பானுமதியின் தந்தையான வெங்கட சுப்பையாவிற்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது. பல்லைக் கடித்தார். பின்னர் அந்த அறையை விட்டு வேகமாக வெளியே சென்று விட்டார்.

நீங்கள் சொன்னபடி சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடச் சொல்கிறேன் . அவர் மிகப் பெரிய பாடகியாக வர வேண்டும் என்பது எனது வாழ்நாள் லட்சியம் என்பதால் குறைந்தபட்சம் அவர் பாட்டுக் கச்சேரி நடத்துவதற்காகவது நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்” என்று ராமகிருஷ்ணாவை வேண்டிக் கேட்டுக் கொண்டார் பானுமதியின் தந்தை. இவர் என்ன மாப்பிள்ளை நான் இதை விட நல்ல ஒரு மாப்பிள்ளை கூட்டி வருகிறேன் என்று கூறியிருக்கிறார். அதற்க்கு பானுமதி அவர்கள் இப்போது தான் அவர் மீது எனக்கிருந்த மரியாதை அதிகரித்திருக்கிறது என்று கூறியுள்ளார். சொன்னது போல ஒரு குடிசையில் தான் தனது வாழ்க்கையை தொடங்கியுள்ளார் அவர். இது தான் நான் பார்த்து வியந்த ஒரு அற்புதமான காதல் கதை." என்று ஒரு நேர்காணலில் சித்ரா லக்ஷ்மணன் அவர்கள் கூறியுள்ளார். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: