மீண்டும் தமிழில் நடிகை பாவனா
நரேன் நடிப்பில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பாவனா தொடர்ந்து, தீபாவளி, ராமேஸ்வரம், அசல், ஜெயம்கொண்டான் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடிதுள்ள இவர், அசல் படத்திற்கு தமிழில் நடிக்கவில்லை. இந்நிலையில், 13 வருடங்களுக்கு பிறகு தற்போது கணேஷ் வெங்கட்ராம் நாயகனாக நடிக்கும் படம் மூலம் பாவனா மீண்டும் தமிழில் என்ட்ரி ஆக உள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
தெலுங்கு நடிகரை காதலிக்கிறாரா வாரிசு நடிகை
வாரிசு படத்தின் மூலம் தமிழில் தனது 2-வது படத்தை கொடுத்துள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் பிரபலமான நாயகியாக வலம் வருகிறார். கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த இவர் அந்த நடிகரை காதலிப்பதாக தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் வெளிநாடுகளில் சுற்றும் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. லைகர் படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டா படவாய்ப்பு இல்லாமல் இருக்கும் நிலையில்,ராஷ்மிகா தற்போது மிஷன் மஜ்னு உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை த்ரிஷாவின் இளமை ரகசியம்
சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகை த்ரிஷா, நடிப்பில் சமீபத்தில் வெளியான ராங்கி படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தொடர்ந்து தற்போது விஜயின் 67-வது படத்தில் த்ரிஷா நடிக்க உள்ளார். சமீபத்தில் ராங்கி படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற த்ரிஷாவிடம் இளமை ரகசியம் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், எப்போதுமே என்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்கிறேன். இது என் குடும்ப ஜீன் என்று சொல்லலாம் என்று கூறியுள்ளார்.
கணவர் இல்லாமல் மகளின் பிறந்த நாள்
முன்னணி நடிகையாக இருந்த மீனா தற்போது தென்னிந்திய மொழிகளில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக இவரது கணவர் வித்யாசகர் மரணமடைந்தது மீனாவை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. இந்த துயரத்தில் இருந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் மீனா கணவர் இல்லாமல் தனது மகள் நைனிகாவின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை மீனா தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.
நடிகையின் புகைப்படத்தை விமர்சிக்கும் நெட்டிசன்கள்
தமிழில் தடையற தாக்க, தீரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை ரகுல் பிரீத் சிங் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது தாய்லாந்து சென்றுள்ள இவர், அங்கு ஒரு தீவில் புத்தாண்டு தினத்தை கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ரகுல் பிரீத் சிங்கை கடுமையான விமர்சித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil