/tamil-ie/media/media_files/uploads/2018/12/a9.jpg)
'பிக்பாஸ் வின்னர் ரித்விகா எந்த ஜாதி?' - தேடியவர்களுக்கு கிடைத்த சூடான பதில்
பொதுவாக பிரபலமானவர்களின் ஜாதி பின்புலத்தைப் பற்றி தெரிந்த கொள்ள சிலர் ஆர்வம் காட்டுவதுண்டு. அது ரஜினியானாலும் சரி... பிக்பாஸ் ரித்விகாவானாலும் சரி... 'இவர் என்ன ஜாதியாக இருப்பார்?' என்ற ஆர்வம் ஏதோ ஒரு அடிப்படைத் தகுதிக் கேள்வி போலவே மனதில் எழுந்து விடுகிறது.
அந்த புதிருக்கு, அப்போதே விடை தேடும் நபர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அதிலும், கூகுள் என்ற ஒன்று கையில் இருக்கும் போது, சகலமும் கிடைத்து விடுகிறது அல்லவா... அதனால், இஷ்டத்துக்கு பலரும் கூகுளிடம் எடக்கு முடக்கான கேள்விகளை கேட்டு வைத்து விடுகின்றனர். அப்படி, ஒரு குறிப்பிட்ட கேள்வியைக் கேட்டு, நடிகை ரித்விகாவிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கின்றனர் அந்த சிலர்.
அது என்னவென்று, உங்களுக்கே புரிந்திருக்கும்.. நடிகை ரித்விகாவின் ஜாதி என்ன என்பது தான். கூகுலில் ‘ரித்விகாவின் ஜாதி’ என்ற தலைப்பில் சுமார் 3 லட்சம் பேர் வரை தேடித் தவித்திருக்கிறார்கள்.
இதற்கு ரித்விகா அளித்துள்ள பதில் இதோ, "ரித்விகா எந்த சாதி என்று தேடுபவர்களுக்கு... நான் குறிப்பிட்ட ஒரு சாதியை சேர்ந்தவள் என்பதால் பிக் பாஸில் வின்னர் ஆனேன் என்று விமர்சிப்பவர்களுக்கு... நான் அந்த சாதியும் இல்லை, இந்த சாதியும் இல்லை. நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா" என்று தெரிவித்திருக்கிறார்.
ரித்விகா எந்த சாதி என்று தேடுபவர்களுக்கு.. நான் குறிப்பிட்ட ஒரு சாதியை சேர்ந்தவள் என்பதால் பிக் பாஸில் வின்னர் ஆனேன் என்று விமர்சிப்பவர்களுக்கு.. நான் அந்த சாதியும் இல்லை, இந்த சாதியும் இல்லை. நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா..
— Riythvika✨ (@Riythvika) November 29, 2018
நோ கமெண்ட்ஸ்...!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.