Bombay Gnanam Tamil News: 90களில் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பம்பாய் ஞானம். மேடை நாடகங்களுக்கு எல்லோராலும் நன்கு அறியப்பட்ட இவர், 1989ம் ஆண்டு மகாலட்சுமி பெண்கள் நாடகக் குழுமத்தை தொடங்கினார். அதன் பிறகு ஒரு மேடைநாடகக் கலைஞராக தனது நடிப்பு வாழ்க்கையையும் ஆரம்பித்தார்.

நடிகை பம்பாய் ஞானம் பிரேமி, கோலங்கள், மெட்டிஒலி, சித்தி, அண்ணாமலை, மற்றும் சிதம்பர ராகசியம் உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கிய காதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ஆகா, ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே, நள தமயந்தி, ஒரு நாள் ஒரு கனவு, வெயில், அழகிய தமிழ்மகன், ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவரின் நடிப்பை பாராட்டி தமிழக அரசு கடந்த 2005ம் ஆண்டில் இவருக்கு கலைமாமணி விருது வழங்கியது.

தற்போது மேடை நாடகங்களை தயாரித்து வெளியிட்டு வரும் நடிகை பம்பாய் ஞானம் சன் டிவியின் புதிய சீரியல் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். அந்த சீரியலின் பெயர் “எதிர்நீச்சல்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலை சன் டிவியின் கோலங்கள் சீரியல் புகழ் திருசெல்வன் இயக்குகிறார். வருகிற பிப்ரவரி 7ம் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.
ஜனனி குடும்பத்துடன் எடுத்த ஒரு Cute 📸
— Sun TV (@SunTV) February 2, 2022
எதிர்நீச்சல் | From Feb 7 | 9:30 PM#SunTV #EthirNeechal #EthirneechalOnSunTV #BeLikeJanani #AppaPonnuGoals #DigitalExclusive pic.twitter.com/bSYVKzAluJ
இந்த சீரியலில் சில புதுமுகங்கள் மற்றும் மக்களுக்கு நன்கு பரீட்சயப்பட்ட சிலர் நடிக்க உள்ளார்கள். இவர்களுடன் நடிகை பம்பாய் ஞானமும் முக்கிய ரோலில் நடிக்கிறார். 10 வருடங்களுக்கு மேலாக இவர் எந்த சீரியலிலும் நடிக்காத நிலையில் தற்போது பெரிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க உள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“