Advertisment

வைரலாகும் டூப் சைத்ரா ரெட்டி; தங்கை போலவே இருக்கிறாரே!

நடிகை சைத்ரா ரெட்டியின் டூப் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறார்; பலரும் அவரை அடடே பார்ப்பதற்கு சைத்ரா ரெட்டி போலவே இருக்கிறாரே! என மூக்கின் மீது விரல் வைத்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Chaitra reddy

சின்னத் திரை நடிகை சைத்ரா ரெட்டி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சின்னத்திரையில் நடித்து தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் சைத்ரா ரெட்டி. பெரும்பாலும் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி,  சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் நடித்து வருகிறார்.

Advertisment

இந்த சீரியலில் வில்லன் காரை வைத்து சைத்ரா ரெட்டியை மோதுவது போல் ஒரு காட்சியை படமாக்கி உள்ளார்கள். இந்த காட்சியில் சைத்ரா ரெட்டிக்கு பதிலாக டூப் ஒருவர் நடித்துள்ளார்.

இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைத்ரா ரெட்டி பதிவேற்றி உள்ளார். இதைப் பார்த்த அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி. யார் இவர் பார்ப்பதற்கு சைத்ரா ரெட்டி போல் இருக்கிறாரே என நெட்டிஷன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் கயல் நாடகத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியல் தான் முதல் இடத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

தற்போது இந்த இடத்தை சிங்க பெண்ணே சீரியல் கைப்பற்றி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Sun Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment