New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/11/tamil-indian-express-2021-11-13T103031.016.jpg)
malayalam actress chandra Lakshman Tamil News: மலையாள ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகை சந்திரா லக்ஷ்மனன். இவர் 'மனசெல்லாம்' என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர். தொடர்ந்து சில படங்களில் நடித்த இவருக்கு திரைப்படங்கள் கை கொடுக்கவில்லை. எனவே தனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களை சீரியல்களில் சூஸ் பண்ணி நடிக்க துவங்கினார்.
மலையாளம் தமிழ் என மாறிமாறி அடுத்தடுத்த சீரியல்களில் நடித்து கலக்கி வந்த நடிகை சந்திரா விஜய் டிவியில் கடந்த 2007ம் ஆண்டு ஒளிபரப்பாகிய "காதலிக்க நேரமில்லை" என்ற சீரியலில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக ப்ரஜின் நடித்திருந்தார். தற்போது 38 வயதாகும் நடிகை சந்திரா 'ஸ்வந்தம் சுஜாதா' என்ற மலையாள சீரியலில் நடித்து வருகிறார்.
நடிகை சந்திரா 35 வயதை கடந்து விட்ட நிலையில் அவரிடம் எப்போது திருமணம் ரசிகர்கள் கேள்வியெழுப்பி வந்தனர். இதனையடுத்து அவர் தனது காதலரை சமூக வலைத்தளத்தில் அறிமுகம் செய்து, விரைவில் திருமணம் நடைபெறும் என அறிவித்தார்.
இந்நிலையில், தனது காதலரும், சக நடிகருமான டோஷ் கிரிஸ்டி என்பவரை நேற்று திருமணம் செய்து கொண்டார். கேரளாவில் நடந்த இந்த திருமண விழாவில் இவர்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர்.
நடிகை சந்திராவின் திருமண புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் தற்போது அவை அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. மேலும், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.