கடந்த 1979-ம் ஆண்டு சிவாஜி கனேசன் நடிப்பில் வெளியான நல்லதொரு குடும்பம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சார்மிளா. தொடர்ந்து 1991-ம் ஆண்டு வெளியான ஒயிலாட்டம் படத்தின் மூலம் நாயகியா அறிமுகமான இவர் தொடர்ந்து தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து 1995-ம் ஆண்டு கிஷோர் சத்யா என்பரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1999-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இதனைத் தொடர்ந்து கடந்த 2006-ம் ஆண்டு ராஜேஷ் என்பரை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவருக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில். கடந்த 2014-ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார்.
தற்போது தனது மகனுடன் தனியாக வசித்து வரும் நடிகை சார்மிளா, தமிழ் மலையாளம் என மாறி மாறி நடித்து வருகிறார். இதில் கடந்த 2020-ம் ஆண்டு இவர் நடிப்பில் வன்முறை மற்றும் கன்னி ராசி உள்ளிட்ட படங்கள் வெளியானது. தற்போது தமிழில் கிராண்மா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில்.சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய 48-வயதான நடிகை சார்மிளா, சினிமா வாழ்க்கையில் தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார். அந்த பேட்டியில், மலையாளத்தில் நாயகியின் அம்மாவாக ஒரு படத்தில் நடித்தபோது அந்த படத்தின் ஷூட்டிங் கோழிக்கூட்டில் நடைபெற்றது. அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவரும் 24 வயது இளைஞர்கள்.
படப்பிடிப்பு தொடங்கியபோது என்னை அக்கா என்று அழைத்தார்கள். ஆனால் அடுத்த 3நாட்களில் அவர்களின் உதவியாளர்களை அனுப்பி அட்ஜெஸ்மெண்ட்டுக்கு ரெடியா என்று கேட்டனர். இதற்காக 50 ஆயிரம் வரை பேரம் பேசினார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்களில் பிடித்த ஒரு நபரை தேர்வு செய்து அவருடன் அட்ஜெஸமெண்ட் செய்துகொள்ள வேண்டும் என்று கூறினார்கள்
என் மகனைவிட கொஞ்ச வயசுதான் உங்களுக்கு அதிகம். அதனால் என்னை அம்மா ஸ்தானத்தில் பாருங்கள் என்று சொன்னேன். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து வற்ப்புறுத்தியதால், படத்தில் இருந்து விலகி அடுத்த நாளே சென்னை திரும்பிவிட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் நடிகைகள் தனியாக இருந்தால், வயதில் சிறியவர்கள் கூட எல்லை மீறி நடந்துகொள்வார்கள் இந்த பிரச்சினையை சினிமாத்துறையில் பலர் எதிர்கொள்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“