சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து தெளிவாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இந்நிலையில், அவரது மரணம் குறித்து விசாரணை நடத்தி வந்த ஸ்ரீபெரும்புதூர் வருவாய் பிரிவு அலுவலர் (ஆர்.டி.ஓ) திவ்யஸ்ரி நேற்றுடன் (வியாழக்கிழமை) தனது விசாரணையை முடித்துவிட்டதாகவும், விரைவில் இந்த வழக்கு தொடா்பான அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 200 பக்கள் கொண்ட அறிக்கையை சமர்பிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த மரணம் தொடா்பான விசாரணையின் போது, இறந்த சித்ராவின், பெற்றோர், அவருடன் வேலை செய்த சக நடிகர்கள், நண்பர்கள் மற்றும் அவரது உதவியாளர் ஆனந்த் ஆகியோர் விசாரிக்கப்பட்டதை வைத்து இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த அறிக்கை வெளியாகும்போது, சித்ரா வரதட்சணை துன்புறுத்தலுக்கு ஆளானாரா அல்லது மன உளைச்சலுக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது என்பது குறித்து தெரியவரும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், சித்ரா இறந்த 6-வது நாளில், அவரது கணவரான ஹேம்நாத் கைது செய்யப்பட்டார், மேலும் சித்ராவின் தாயாரும், தனது மகளின் தற்கொலைக்கு ஹேம்நாத் தான் காரணம் என குற்றம் சாட்டினார். ஹேம்நாத் தனது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாகவும், அவரது நண்பர்களுடனான விசாரணைகயின் அடிப்படையில் தங்களிடம் போதுமான ஆதாரங்கள் இருப்பதாக போலீசார் கூறியுள்ளர்.
ஆனாலும், வேறொருவரைப் பாதுகாக்க தனது தனது மகன் மீது குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள ஹேம்நாத்தின் தந்தை, டிசம்பர் 9 ஆம் தேதி சித்ரா இறந்து கிடந்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ரிசார்ட்டில் சிசிடிவி கேமராக்கள் இல்லாதது குறித்து போலீசார் ஏன் விசாரிக்கவில்லை அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"