நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா தனது 51 ஆனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ள நிலையில், அவரது மகன் சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்து அசத்தியுள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/95605817-383.jpg)
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ’90களில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. தெலுங்கு படங்களில் நடித்து வந்த ரோஜாவை ’செம்பருத்தி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் ஆர்.கே. செல்வமணி. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வந்த ரோஜா, தன்னை தமிழில் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்துக் கொண்டார். தற்போது ஆந்திர மாநிலத்தில் ஜெகன் ரெட்டியின் அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
/indian-express-tamil/media/post_attachments/b34f9821-19e.jpg)
ரோஜாவுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மகள் அன்ஷூமாலிகா வெளிநாட்டில் படித்து வருகிறார்.
/indian-express-tamil/media/post_attachments/315f2840-cd4.jpg)
இந்தநிலையில், நவம்பர் 17 ஆம் தேதி ரோஜா தனது 51 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். தனது கணவர் செல்வமணி, மகன் கிருஷ்ணா லோகித் உள்ளிட்ட குடும்பத்தினருடன் ரோஜா தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்போது அவரது மகன் கிருஷ்ணா லோகித் தனது ரோஜாவுக்கு 5 அடுக்கு கேக்கை பரிசாக அளித்து அசத்தியுள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/f1cbfe2c-e33.jpg)
இதுதொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரோஜா, “சிறந்த பிறந்தநாள் பரிசு எனக்கு என்ன அருமையான நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இருக்கிறார்கள் என்பதை நினைவுபடுத்துகிறது! ஒருவரை எப்படி மிகவும் பிரத்யேகமாகவும் அன்பாகவும் உணர வைப்பது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்... அனைவருக்கும் நன்றி,” என்றும் பதிவிட்டுள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/9aa1ad3a-74d.jpg)
ரோஜா பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“