தொட்டா சிணுங்கி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் தேவயாணி. 1990 களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த தேவயாணி தன்னை வைத்து இயக்கிய இயக்குநரான ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கமல்ஹாசன், விஜய், அஜித் என உச்சக்கட்ட நடிகர்கள் அனைவருடனும் சேர்ந்து நடித்தவர் தேவயாணி. இவருடைய சாந்தமான அமைதியான முகமும் கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழும் இவருக்கென தனியே ஒரு ரசிகர் கூட்டத்தைப் பெற்றுத் தந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
அஜித்துடன் இவர் இணைந்து நடித்த காதல் கோட்டை திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டிருந்ததால் பட்டிதொட்டியெங்கும் பேசப்பட்டது. குறிப்பாக கிராமப்புற மக்களால் அதிகம் விரும்பப்பட்டார்.
மார்க்கெட்டில் உச்சத்தில் இருந்த காலகட்டத்திலேயே காதல் வயப்பட்டார் தேவயாணி. பணம், புகழ், மார்க்கெட் என எதைப் பற்றியும் கவலைப்படாமல் இயக்குநர் ராஜகுமாரன் மீது காதலில் விழுந்த இவர் அனைத்தையும் விட்டுவிட்டு, உடனே திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்தார்.
தேவயாணி, பார்த்திபன், அஜித்தை வைத்து நீ வருவாய் என என்ற படத்தை இயக்கியவர் தான் ராஜகுமாரன். அந்த படத்தின் வெற்றிக்குப் பின் தேவயாணிக்கு ராஜகுமாரன் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
அதையடுத்து மீண்டும் தேவயாணி, விக்ரமை வைத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை இயக்கினார் ராஜகுமாரன். இந்த பட ஷூட்டிங் ஸ்பாட்டில் ராஜகுமாரனின் அமைதியான, அன்பாக நடந்து கொள்ளும் பண்பும் அவருடைய கடின உழைப்பையும் பார்த்து அவர்மீது தேவயாணிக்கு காதல் ஏற்பட்டதாம்.
தேவயாணியின் குழந்தைத்தனமான பேச்சும் இளகிய குணமும் ராஜகுமாரனை ஈர்க்க, இப்படியொரு பெண் தன்னுடைய வாழ்க்கைத் துணையாக வந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கவே இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது.
இந்த படம் ரிலீஸாகி கொஞ்ச காலத்திலேயே இருவரும் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்கள். தன்னுடைய காதலைப் பற்றி தேவயாணி அவருடைய வீட்டில் சொல்ல, அவரின் வீட்டில் பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. அவருடைய பெற்றோர்கள் இந்த காதலை ஏற்கவில்லை. அதனால் வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்தாராம். தன்னுடைய வீட்டில் கடுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்த சமயத்தில் காதலுக்காக வீட்டை எதிர்க்க முடிவு செய்தார்.
இந்த பொண்ணு இருக்கிற அழகுக்கு இந்த பையனை கல்யாணம் செஞ்சிருக்காங்க. அதோட அந்த பையன் ரொம்ப ஏழ்மையான குடும்பம் வேற. இந்த பொண்ணு வசதியா வாழ்ந்துட்டு எப்படி சமாளிக்கப் போகுதோ? அவசரப்பட்டிருச்சு இப்படி நிறைய விமர்சனங்களை சந்திக்க வேண்டியிருந்தது.
ஆனால் தேவயாணி அழகை எதிர்பார்க்கவில்லை. அவருடைய அன்பை நம்பி அவரை ஏற்றுக் கொண்டார்.