90ஸ் கிட்ஸ் காலகட்டத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த சூர்ய வம்சம் படத்தில், நாயகி தேவயானி வீட்டிற்கு வரும் தனது தந்தைக்கு இட்லி உப்புமா செய்து பரிமாறுவார். அந்த காட்சிகளை தற்போது நினைவு கூர்ந்துள்ளார்.
90ஸ் கிட்ஸ் காலகட்டத்தில், தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. தமிழ் சினிமாவில் விஜய், அஜித், கமல் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து காதல் கோட்டை, சூர்யவம்சாம், நீ வருவாய் என உள்பட 75 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருத்தணி முருகன் கோவிலில் கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இனியா, பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
தற்போது சின்னத்திரையில் பிஸியாக நடித்து வருகிறார். குறிப்பாக இவர் நடித்திருந்த 'கோலங்கள்' சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
இன்று வரை, இல்லத்தரசிகளால் மறக்க முடியாத சீரியல்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது. தற்போதும் பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சீரியல் ஒன்றில் நடித்து வரும் தேவயானி, அவ்வப்போது பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
அப்படி, 90ஸ் கிட்ஸ் காலகட்டத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த சூர்ய வம்சம். இந்த படத்தில், நாயகி தேவயானி காதல் திருமணம் செய்து கொண்டு வறுமையில் வாழ்கை நடத்தும் நேரத்தில், வீட்டிற்கு வரும் தனது தந்தைக்கு இட்லி உப்புமா செய்து பரிமாறுவார். அதை சாப்பிட்டு அவர் வெகுவாக பாராட்டுவார்.
இந்த படத்திற்கு பின் இட்லி உப்புமா ஃ பேமஸ் ஆனது. இது குறித்து, தேவயானி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ''இட்லி உப்புமா இயக்குநர் விக்ரமனோட எண்ணம் தான், அவரோட கான்செப்ட் தான். என்னுடைய கணவருக்கும் குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும். எனக்கே ரொம்ப பேவரைட் டிஷ்" என்று சிரிப்புடன் கூறியிருந்தார்.
தான் வெளியே செல்லும்போது கூட பலர் இந்த உப்புமா பத்தி கேட்கும் போது எனக்கு சிரிப்பாக வரும் என்று தேவயானி கூறி இருக்கிறார். அதோடு வெளியே செல்லும் இடங்களில் சூரியவம்சம் திரைப்படத்தின் பாடல்களில் பலருடைய மொபைல் ரிங் டோனாக இருப்பதை பார்த்து எனக்கே வியப்பாக இருக்கும். இப்ப கூட அந்த டிஷ் இவ்வளவு பேமஸ் என்று அவர் மிகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.