scorecardresearch

பிளஸ் 2-ல் தேவயானி மகள் இவ்ளோ மார்க்: குவிந்த வாழ்த்துகள்

நடிகை தேவயானி, இயக்குனர் ராஜகுமாரன் தம்பதியருக்கு இனியா, பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

Actress Devayanis daughter 12th class marks are out
நடிகை தேவயானி

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா, பூங்காற்று பிடிச்சிருக்கா, பௌணர்மி நிலவு பிடிச்சிருக்கா? என்று பாடி பட்டிதொட்டியெங்கும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை தேவயானி.
இவர் இயக்குனர் ராஜகுமாரனை 2001ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பின்பு, படத்துக்கு முழுக்குப் போட்டார்.

தொடர்ந்து ஆசிரியை பணி செய்தார். இந்நிலையில் தற்போது மாரி என்ற சின்னத் திரை தொடரில் நடித்துவருகிறார்.
நடிகை தேவயானி, இயக்குனர் ராஜகுமாரன் தம்பதியருக்கு இனியா, பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
இதில் இனியா 12ஆம் வகுப்பு படித்துவந்தார். அவர் 12ஆம் வகுப்பு தேர்வில் 600க்கு 492 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். நடிகை தேவயானி அஜித்துடன் காதல் கோட்டை, விஜய் உடன் பிரண்ட்ஸ் என ஹிட் படங்களில் நடித்திருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress devayanis daughter 12th class marks are out