தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் திவ்ய பாரதி. இவர் ஜி.வி பிரகாஷ் குமார் நடித்த 'பேச்சுலர்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே நடிப்பும் மற்றும் அழகால் ரசிகர்களை கவர்ந்தார். மாடலிங் மூலம் சினிமா பயணத்தை தொடங்கி இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முகின் ராவ் உடன் இணைந்து மதில் மேல் காதல் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய திவ்ய பாரதி, தாம் கல்லூரி படிக்கும் போது சக மாணவர்களால் உருவக்கேலி செய்யப்பட்டதாக கூறியுள்ளார். இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், தன் உடலை வெறுக்கும் அளவுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
/indian-express-tamil/media/media_files/tBaHprpMpfQmwOwmALLu.jpg)
பின்னர், 2015-ல், அவர் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்குத் தொடங்கி தனது மாடலிங் பயணத்தைத் தொடங்கியுள்ளார். அப்போது அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாகவும், பாராட்டுகள் கிடைத்தாகவும் கூறியுள்ளார். எப்போது இதை தெரிந்து கொள்ளுங்கள், தவறான விமர்சனங்களுக்கு மத்தியில் நீங்கள் உங்களை எப்படி நேசிக்கிறீர்கள் என்பதைப் பற்றியே உள்ளது என்று அவர் அறிவுரை கூறினார். இந்நிலையில் அவரது கல்லூரி காலப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“