/indian-express-tamil/media/media_files/2025/04/02/0pxBuTBOwNF6cEBU8Bck.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் ஜி.வி. பிரகாஷ் குமார் கடந்த 2013 ஆம் ஆண்டு பின்னணிப் பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ள நிலையில் கடந்த 12 வருடங்களாக ஒன்றாக இருந்த இருவரும் சமீபத்தில் பிரிவதாக தெரிவித்தனர்.
இது சமூக வலைத்தளத்தில் பரவி வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை குடும்ப நல கோர்ட்டில் பரஸ்பர விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல கோர்ட்டு நீதிபதி செல்வ சுந்தரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜி.வி. பிரகாஷ், சைந்தவி இருவரும் நேரில் ஆஜராகி, இருவரும் பிரிவதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
இதற்கிடையில், ஜி.வி. பிரகாஷ், சைந்தவி விவாகரத்துக்கு திவ்ய பாரதி தான் காரணம் என சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இதற்கு மறுப்பு தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் திவ்ய பாரதி விளக்கம் அளித்துள்ளார்.
அந்த ஸ்டோரியில் அவர், "ஜிவி பிரகாஷின் குடும்ப விவகாரத்தில் எனக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை. வெளிப்படையாகச் சொன்னால், நான் ஒரு நடிகருடன் டேட்டிங் செய்ய மாட்டேன், நிச்சயமாக திருமணமான ஆணுடன் இல்லை.
ஆதாரமற்ற வதந்திகளை நம்புவது என் கவனத்தை ஈர்க்கவில்லை என்று நான் இதுவரை அமைதியாக இருந்தேன். இருப்பினும், இது ஒரு எல்லையைத் தாண்டியது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதை நான் மறுக்கிறேன். நான் ஒரு வலிமையான, சுதந்திரமான பெண், தான் வதந்திகளால் வரையறுக்கப்பட மாட்டேன். எதிர்மறையைப் பரப்புவதை நிறுத்துங்கள் இந்த விஷயத்தில் இதுவே எனது முதல் மற்றும் இறுதி அறிக்கை" என்று அதில் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.