Actress divya ganesh Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களுள் ஒன்று ‘பாக்கியலட்சுமி’ சீரியல். குடும்பத் தலைவியின் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்ட இந்த சீரியலில், குடும்பத் தலைவியாக பாக்கியலட்சுமி இருக்கிறார். அவருடை மூத்த மருமகள் ஜெனிபர் கதாபாத்திரத்தில் நடிகை திவ்யா கணேஷ் நடித்து வருகிறார்.

சின்னத்திரை சமந்தா என்று அழைக்கப்படும் திவ்யா கணேஷ் சுமங்கலி சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானவர். தற்போது அவர் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் ஆரம்பத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு அதிக வேலை இல்லாமல் இருந்தது ஆனால், தற்போது ஜெனி கதாபாத்திரத்திற்கு வெயிட் கூடி இருக்கிறது.

திவ்யா கணேஷ் தன்னை எப்போதும் ஸ்லிம் ஆகவும், ஃபிட் ஆகவும் வைத்திருக்க நினைப்பவர். இளைஞர்களை கவர்ந்த சின்னத்திரை நடிகைகளில் ஒருவராக வலம் வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். பாக்கியலட்சுமி சீரியலில் அவரது ரோல் அதிகம் ரசிகர்களுக்கு பிடித்தது தான் இவ்வளவு ரசிகர்கள் கிடைக்க ஒரு முக்கிய காரணம் என்றும் கூறலாம்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் திவ்யா கணேஷ் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். மேலும் தனது ரசிகர்கள் கேட்க்கும் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார்.

இந்நிலையில், திவ்யா கணேஷ் சமீபத்தில் ரசிகர்களுடன் கேள்விக்கு பதிலளித்து இருந்தார். அதில் ஒரு ரசிகர், “உங்களுக்கு எப்போது திருமணம் அக்கா” என்று கேட்டிருந்தார். அதற்கு திவ்யா கணேஷ், “விரைவில் எனக்கு திருமணம். ஆனால், யார் மாப்பிள்ளை என்று தான் தெரியவில்லை.” என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“