பாக்டீரியா என்ற ட்விட்டர் பக்கத்தில் ஜெய் ஸ்ரீராம் என்று குறிப்பிட்டு கடவுள் ராமர் படத்தையும் கம்ப்யூட்டரில் உள்ள ராம் கருவியையும் ஒப்பிட்டு ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கடவுள் ராம், சீதவை திருமணம் செய்துகொள்கிறார். ஆனால், கம்யூட்டர் ராம்-க்கு மனைவி தேவை இல்லை. கடவுள் ராம், ஓட முடியாது. ஹெவி ஆப்கள், சாஃப்ட்வேர்களை வேகமாக இயக்க முடியாது. ஆனால், கம்யூட்டர் ராம் ஹெவியான சாஃப்ட்வேர்களை இயக்கும்.
கடவுள் ராம், அவருடைய மனைவியை நெருப்பில் நடக்க சொல்வார். ஆனால், கம்யூட்டர் ராம் எதுவுமே கேட்காது. கடினமான வேலைகளை எல்லாமே அதுவே செய்யும்.
கம்ப்யூட்டர் ராம் 8400 மெகா ஹெர்ஸ் ஃபிரிக்யூவென்ஸியில் இயங்க முடியும். ஒப்பிட்டளவில் கடவுள் ராம் மிகவும் மெதுவானவர்.
கடவுள் ராம் முழுவதுமாக உபயோகமற்றவர், ஆனால், கம்யூட்டர் ராம் மிகவும் உபயோகமானது என்று கடவுள் ராம் மற்றும் கம்யூட்டர் ராமையும் ஒப்பிட்டு கிண்டல் செய்து அந்த பதிவு அமைந்துள்ளது. கடவுள் ராமரை கேலி செய்யும் இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் தங்கள் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
கடவுள் ராம் மற்றும் கம்யூட்டர் ராம் ஒப்பிட்டு நகைச்சுவையாக கேலி செய்த பதிவை சின்னத்திரை நடிகையும் மருத்துவருமான ஷர்மிளா தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்தார்.
எம்.பி.பி.எஸ் டாக்டரான ஷர்மிளா, சின்னத்திரையில் சீரியல்களிலும் நடித்து வருகிறார். சன் டிவியின் ரோஜா சீரியலில் ஹிரோயினுக்கு அம்மாவாக நடித்து வருகிறார். சமூக ஊடகங்களில் ஆக்டீவ்வாக இருக்கும் டாக்டர் ஷர்மிளா விசிகவைச் சேர்ந்த திருப்போரூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ். பாலாஜியின் மனைவி ஆவார். சமூக ஊடகங்களில் முற்போக்கான கருத்துகளை பதிவிட்டு வரும் ஷர்மிளா, கடவுள் ராம் மற்றும் கம்யூட்டர் ராம் ஒப்பிட்டு நகைச்சுவையாக கேலி செய்த பதிவை தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்தார்.
டாக்டர் ஷர்மிளா கடவுள் ராமரை கேலி செய்யும் பதிவை பகிர்ந்ததால் கோபமடைந்த இந்து மத ஆதரவு நெட்டிசன்கள், அவருக்கு கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர். இவர்களைப் போன்றவர்கள் இந்து மத ஆதரவாளர்களின் கோபத்தை தூண்டிவிட வேண்டும் என்பதற்காக பதிவிடுகின்றனர். அதனால், கண்டுகொள்ளாமல் செல்ல வேண்டும் என்று பதிவிட்டுள்ளனர். சிலர், இதே போல, மற்ற மதத்தின் கடவுள்களையும் விமர்சிப்பீர்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”