ஃபரினா மீது வெறித்தன காதல்: 'முஸ்லிம் பையன் மாதிரி பண்ணிட்டு வந்துட்டாப்ல... உங்களுக்குப் புரியுதா?'

சின்னத்திரை நடிகை ஃபரீனாவின் மீது வெறித்தனமாக காதல் வைத்த நபரை குறித்து அவர் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

சின்னத்திரை நடிகை ஃபரீனாவின் மீது வெறித்தனமாக காதல் வைத்த நபரை குறித்து அவர் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
FAREENA

ஃபரினா மீது வெறித்தன காதல்: 'முஸ்லிம் பையன் மாதிரி பண்ணிட்டு வந்துட்டாப்ல... உங்களுக்குப் புரியுதா?'

பொதுவாக வெள்ளித்திரை நடிகைகளுக்கு எப்படி  பெரிய மவுசு இருக்கிறதோ அதேபோன்று சின்னத்திரை நடிகைகளுக்கும் மக்கள் மத்தியில் ஒரு தனி இடம் இருக்கிறது. அப்படி தனக்கான இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஃபரீனா. இவர் தனியார் தொலைக்காட்சியில் வெளியான ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.

Advertisment

சொல்லப்போனால் பலரும் அந்த சீரியலை பார்ப்பதற்கு பரீனா ஒரு முக்கிய காரணமாக இருந்தார். இவரது வில்லத்தனம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஃபரீனா இப்படி நடிப்பாரா என்ற அளவிற்கு அந்த சீரியலில் உச்சக்கட்ட நடிப்பை வெளிப்படுத்தினார். தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சி தொடர்ந்து நடிகை ஃபரீனா நடித்து வருகிறார்.

இவர் நடிகையாக மட்டுமல்லாமல் தொகுப்பாளினியாகவும் இருந்துள்ளார். ’அஞ்சறை பெட்டி’ நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கினார்.  ஃபரீனாவின் பேச்சை கேட்பதற்காகவே பலரும் அந்த நிகழ்ச்சியை பார்த்தனர். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஃபரீனா அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்.

துருதுருவென தனது பேச்சு திறமையால் அனைவரையும் மயக்கும் பரீனாவிற்கு திருமணம் ஆனதே பலருக்கும் தெரியாது. இவர் தான் கர்ப்பகால புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டதன் மூலமே அவருக்கு திருமணமானது பலருக்கும் தெரியும். இப்படி பல திறமைகளை கொண்ட ஃபரீனா தனக்கு வந்த புரொபோஷல் குறித்து மனம் திறந்துள்ளார்.

Advertisment
Advertisements

பிகைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்த அவர், “ஒரு பையன் பின்னாடி வந்து புரோஸ்லாம் பண்ணுனான். நான் எப்படி கழட்டிவிடுறதுனு தெரியாம எங்க வீட்டுல முஸ்லிம் பையன் இல்லனா ஏத்துக்கமாட்டாங்கனு சும்மா சொன்னேன். உனக்கு என்ன அவ்வளவு தான வேணும் முஸ்லிம் பையன் என்ன பண்ணுவானோ நான் அத பண்ணிட்டுவறேனு அடுத்த நாள் அதை செய்துவிட்டு வந்துவிட்டார். இதனால் நான் ரொம்ப பயந்துடேன். அப்பறம் என்ன விட்டுருங்கனு அப்படி பேசாம போட்டோம்” என்றார்.

Cinema Actress Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: