Advertisment

நேற்று வாழ்த்து… இன்று கேள்வி… பாரதி கண்ணம்மா வில்லியின் வைரல் பதிவு

Bharathi Kannama Farina Azad latest Tamil News: ஃபரினா தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படம் வெளியிட்ட நிலையில், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் 'அவர் கர்ப்பமாக இருப்பது போல தெரியவில்லை' என நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

author-image
WebDesk
New Update
Actress Farina Azad Tamil News: Bharathi Kannama Farina fans asks about her baby

Actress Farina Azad Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முன்னணி சீரியலாக 'பாரதி கண்ணம்மா' வலம் வருகிறது. அதிலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் எபிசோடுகள் அனைத்தும் பரபரப்போடு உள்ளதால் டிஆர்பியில் டாப் 3 இடங்களை தக்க வைத்துக்கொள்கிறது. இந்த சீரியலை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு வெண்பா குறித்து சொல்லவே தேவையில்லை. ஏனென்றால் இந்த சீரியலில் வரும் வெண்பாவை யாரும் திட்டாமல் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு வில்லத்தனமான கதாபாத்திரமாக அது உள்ளது.

Advertisment
publive-image

இந்த வெண்பா கதாபாத்திரத்தில் நடிகை ஃபரினா அசாத் நடித்து வருகிறார். ஃபரினா சன் டிவியில் ஒளிப்பரப்பாகிய கிச்சன் கலாட்டா சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர். தொடர்ந்து கலர்ஸ் தமிழின் ‘தறி’ சீரியலும், தற்போது விஜய் டிவி-யின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலும் நடித்து வருகிறார். சீரியல்களில் நடிக்க விருப்பம் இல்லாத இவர் ’தறி’ சீரியலில் வாய் பேச முடியாத வாணியாகவும், ‘பாரதி கண்ணம்மா’வில் வெண்பா என்ற வில்லியாகவும் மிரட்டி வருகிறார்.

publive-image

ஃபரினா தான் கர்ப்பமாக இருப்பதாக நேற்று முன்தினம் புகைப்படம் வெளியிட்டு இருந்த நிலையில், நேற்று வெளியிட்டு உள்ள புகைப்படத்தில் அவர் கர்ப்பமாக இருப்பது போல தெரியவில்லை. இந்த புகைப்படத்தை கவனித்த நெட்டிசன்கள் ஃபரினாவின் கர்ப்பம் குறித்து கேள்விகளை கமெண்டில் கேட்க ஆரம்பித்தனர். அதில் உங்கள் குழந்தை எங்கே என்பது போன்ற கேள்விகள் அதிகம் இருந்தன.

publive-image

கமெண்டில் ஒருவர் 'எங்க உங்க பாப்பா காணோம்' என்றுள்ளார். மற்றொருவரோ, 'நீங்க நிஜமாகவே pregnant தானா' என்றிருக்கிறார். ஃபரினாவுக்கு வாழ்த்து சொல்லிய அதே ரசிகர்கள் தற்போது கமெண்டில் கலாய்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

publive-image

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Serial Actress Tv Serial Bharathi Kannamma Serial Tamil Serial Update Vijay Tv Serial 2 Vijaytv Serial Farina Azad Serial Barathi Kannamma Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment