விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் அறிமுகமாகி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரியல்லா. 2009-ம் ஜோடி நம்பர் ஒன் ஜூனியர் நிகழ்ச்சியின் வின்னரான இவர், 7ம் வகுப்பு சி பிரிவு என்ற தொடரின் மூலம் சீரியலில் அறிமுகமானார்.

அதன்பிறகு, கிச்சன் சூப்பர் ஸ்டார், ஷோடி நம்பர் ஒன் சீசன் 6, பிக்பாஸ் சீசன் 4 உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றார். இதனிடையே தனுஷ் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்து பாராட்டுக்களை பெற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிபி ஜோடிகள், ஸ்டார்ட் மியூசிக், வேர் ஈஸ் தி பார்ட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கேப்ரியல்லா தற்போது ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
மேலும் சென்னையில் ஒருநாள் அப்பா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கேப்ரியல்லா, சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
இதில் அவ்வப்போது அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சமீபத்தில் அவர் வித விதமான சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“