Advertisment

ஷார்ட் ஸ்கர்ட்டில் விஜய் சேதுபதி பட நாயகி க்யூட் டான்ஸ்; வைரல் வீடியோ

நடிகர் விஜய் சேதுபதியுடன் அதிகமான படங்களில் ஜோடியாக நடித்து கலக்கியுள்ள நடிகை காயத்ரி ஷார்ட் ஸ்ட்கர்ட் அணிந்து ஸ்லோ மோஷனில் க்யூட்டாக டான்ஸ் ஆடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
ஷார்ட் ஸ்கர்ட்டில் விஜய் சேதுபதி பட நாயகி க்யூட் டான்ஸ்; வைரல் வீடியோ

நடிகர் விஜய் சேதுபதியுடன் அதிகமான படங்களில் ஜோடியாக நடித்து கலக்கியுள்ள நடிகை காயத்ரி ஷார்ட் ஸ்ட்கர்ட் அணிந்து ஸ்லோ மோஷனில் க்யூட்டாக டான்ஸ் ஆடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

கூத்துப் பட்டறையில் நடிகராக உருவாக்கப்பட்ட விஜய் சேதுபதி பல படங்களில் சிறிய சிறிய வேடங்களில் நடித்துவந்த நிலையில், அவரை தென்மேற்கு பருவக் காற்று படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சீனு ராமசாமி. இப்போது, விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். எப்போது பிஸியாக இருக்கும் நடிகராக மாறியுள்ளார்.

விஜய் சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம் ஓடிடியில் வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் திரைப்படமும் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளது.

விஜய் சேதுபதி மற்றும் சீனுராமசாமி கூட்டணி தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து இப்போது 3வது முறையாக மாமனிதன் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார்.

சமீபத்தில் இயக்குனர் சீனு ராமசாமி, மாமனிதன் திரைப்படத்தில் காயத்ரியின் நடிப்பை ஆஹா ஓஹோ என பாராட்டி இருந்தார். மேலும், படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தும் காயத்ரியின் நடிப்பை பாராட்டியதாக தெரிவித்திருந்தார். அதனால், மாமனிதன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் விஜய் சேதுபதிக்காக மட்டுமல்ல காயத்ரிக்காகவும் அதிகரித்துள்ளது.

நடிகை காயத்ரி விஜய் சேதுபதி திரைப்படங்களில், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கிய காயத்ரி அதைத்தொடர்ந்து ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் என தொடர்ந்து அவருடன் நடித்து வருகிறார். இந்நிலையில் காயத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஷார்ட் ஸ்ட்கர்ட் அணிந்து ஸ்லோ மோஷனில் க்யூட்டாக டான்ஸ் ஆடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil
Vijay Sethupathi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment