ஜீ தமிழின் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடித்து வரும் நடிகை காயத்ரி யுவராஜ் தற்போது தான் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல் ஒளிபரப்பி வரும் ஜீ தமிழில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. முதலில் நடிகை அர்ச்சனா மீனாட்சியாக நடித்து வந்த நிலையில், திடீரென அவர் விலகியதை தொடர்ந்து தற்போது ஸ்ரீரஞ்சனி மீனாட்சியாக நடித்து வருகிறார்.
யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றெடுப்பதை பெற்றெடுத்தால் மீனாட்சியின் கணவர் ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்பதற்காக புஷ்பா என்பரை திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டார். இதனால் மீனாட்சி தனது வாழ்வாதாரத்திற்காக மகள்களுடன் இணைந்து மெஸ் தொடங்கி வாழ்க்கை நடத்தி வருகிறார். இவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பங்கள் தான் இந்த சீரியலின் கதை.
அதேபோல் அப்பாவை பழிவாங்க ஐஏஎஸ் அதிகாரியாக வருவேன் என்று சபதம் செய்கிறார் சக்தி. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த சீரியலில் மீனாட்சியின் மூத்த மகளாக யமுனா கேரக்டரில் நடித்து வரும் நடிகை காயத்ரி யுவராஜ் தற்போது சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
சமீப காலமாக தமிழ் சீரியலில், சங்கீதா, விஜே அர்ச்சனா, ரியா விஸ்வநாதன், காவ்யா அறிவுமணி உள்ளிட்ட பல நடிகைகள் சீரியலில் இருந்து விலகி வரும் நிலையில், இந்த பட்டியலில் தற்போது காயத்ரி யுவராஜூவும் இணைந்துள்ளார். சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி, சில சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த காயத்ரி, சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்த நிலையில்,கர்ப்பம் காரணமாக சீரியலில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது.
இதனிடையே அடுத்த யமுனா யார் என்ற கேள்வி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகை காவ்யா பெல்லு அடுத்த யமுனாவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. எஸ். குமரன் இயக்கிய தென்றல் என்ற தமிழ் சீரியலில் அறிமுகமான காயத்ரி யுவராஜ், அடுத்து பிரியாசகி, அழகி, சரவணன் மீனாட்சி 3, பொன்னுஞ்சல், சித்தி 2, மோகினி, களத்து வீடு, மெல்ல திரண்டது கடவுள், அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர் 2, மீனாட்சி பொன்னுகா போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“