12 வயதில் அறிமுகம், 34 வயதில் மரணம்; பெரிய குடும்பத்து மருமகள் இந்த நடிகை படிக்காத மேதை!

குறிப்பிட்ட காலத்தில் தனது நடிப்பு திறமையால் மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

குறிப்பிட்ட காலத்தில் தனது நடிப்பு திறமையால் மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
geeta

12 வயதில் அறிமுகம், 34 வயதில் மரணம்; பெரிய குடும்பத்து மருமகள் இந்த நடிகை படிக்காத மேதை!

1940 மற்றும் 1950 காலக்கட்டங்களில் திரைப்படத் துறையில் வேலை செய்யும் பெண்களை பெரும்பாலும் யாரும் மரியாதையாக நடத்தவில்லை. இருந்தும் அவர்கள் தங்கள் குடும்பங்களுக்காக திரைத்துறையில் பணியாற்றினார். 

Advertisment

அந்த வரிசையில் வந்தவர் தான் நடிகை கீதா பாலி. தனது 12 வயதில் நடன இயக்குநர் பண்டிட் கியான் சங்கரின் ‘தி காப்லர்’ என்ற ஆவண படத்தில் நடித்ததன் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். பின்னர், கேதர் சர்மாவின் ‘சோஹாக் ராத்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலமே மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்தார்.

நடிகை கீதா பாலியின் மகன் ஆதித்யராஜ் கபூர், டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் தனது தாயின் வாழ்க்கை குறித்து பல தகவல்கலை பகிர்ந்துள்ளார். அவர் பேசியதாவது, “ கீதா பாலி ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை பொற்கோயிலில் பஜனை பாடும் வேலை செய்து கொண்டிருந்தார். 

குடும்ப சூழ்நிலை காரணமாக கீதா பாலி நடிப்பதில் ஆர்வம் காட்டினார். இதனால் தன் சொந்த சமுதாயத்தினரால் அவர் வெறுக்கப்பட்டார். பின்னர், மனமுடைந்த கீதா பாலி, லாகூருக்கு ஓடிச்சென்ற நிலையில் அங்குள்ள ஆல் இந்தியா ரேடியோவில் தனது 13 வயதில் பாடகியாக வேலைக்கு சேர்ந்தார்.  

Advertisment
Advertisements

இதையடுத்து அவர் மும்பைக்கு குடிபெயர்ந்தார். மும்பைக்கு குடிபெயரும் முன் கீதா பாலி இரண்டு படங்களில் நடித்திருந்தார். பின்னர் 1948-ஆம் ஆண்டு கேதர் சர்மா இயக்கிய ’சோஹாக் ராத்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானர்.

இப்படம் அவரது வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. இந்தக் காலகட்டத்தில், அவர் ஷம்மி கபூரின் கவனத்தையும் ஈர்த்தார். அந்த நேரத்தில் ஷம்மி கபூருக்கு 15 படங்கள் தோல்வியை சந்தித்தது. ஆனால், கீதா பாலி மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஷம்மி கபூரை திருமணம் செய்து கொண்டார்” என்றார்.

கீதா பாலி குறித்து  கேதர் சர்மா கூறியதாவது, “கீதா எனக்கு மிகவும் பிடித்தமானவர்களில் ஒருவர். அவர் படிக்கவில்லை. ஆனால், கடினமாக உழைத்தார். பண்டிட் கியான் சங்கர் என்ற நடனக் கலைஞர் தான் கீதா பாலியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அவர் கீதா என்ற ஏழைப் பெண் இருக்கிறார். அவளும் அவளுடைய பார்வையற்ற தந்தையும் ரயில் தண்டவாளத்திற்கு அடுத்த வீட்டில் வசித்து வருகிறார்கள். தயவுசெய்து, அவளைச் சந்திக்க வர முடியுமா? அவள் என் மகள் போன்றவள் என்றார்.

நானும் கீதாவின் வீட்டிற்கு சென்றேன் அங்கு எனக்கு உட்கார கூட இடமில்லை. கீதாவை பார்த்த பின்னர் நான் அவரை நடிக்க தேர்ந்தெடுத்தேன்” என்றார். நடிகை கீதா பாலி தனது 34 வயதில் அம்மை நோயால் உயிரிழந்தார். 

நடிகை கீதா பாலி பாலிவுட்டில் மிகக் குறிய காலக்கட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: