மும்பை திரும்பிய ஹன்சிகா – சோகைல் : ஹனிமூன் குறித்த கேள்விக்கு பதில் என்ன?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ஹன்சிகா கடந்த டிசம்பர் 4-ந் தேதி தொழிலதிபர் சோகைல் கதூரியா என்பரை திருமணம் செய்துகொண்டார்.

மும்பை திரும்பிய ஹன்சிகா – சோகைல் : ஹனிமூன் குறித்த கேள்விக்கு பதில் என்ன?

ராஜஸ்தானில் திருமணம் முடிந்து மும்பை திரும்பிய நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹேல் கதுரியா இருவரும் மும்பை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஹனிமூன் பிளான் குறித்து கேட்டப்பட்டது தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ஹன்சிகா கடந்த டிசம்பர் 4-ந் தேதி தொழிலதிபர் சோகைல் கதூரியா என்பரை திருமணம் செய்துகொண்டார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர்.

தொடர்ந்து ஹன்சிகா சோகைல் கதூரியா திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ஜெய்ப்பூரில் திருமணத்தை முடித்த ஹன்சிகா சோகைல் கதூரியா ஜோடி நேற்று மும்பை திரும்பினர்.

இவர்கள் மும்பைக்கு வரும் செய்தி அறிந்து மும்பை விமான நிலையில், குவிந்த செய்தியாளர்கள் இருவரையும் புகைப்படம் எடுக்க விரைந்தனர். அப்போது விமான நிலையத்தில் திருமண ஜோடி இருவரும் கைகோர்த்தபடி ஒன்றாக நடந்து வந்தனர். இந்த சந்திப்பின்போது ஹன்சிகா மற்றும் சோஹேலிடம் ஹனிமூன் திட்டம் குறித்து புகைப்படக் கலைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த கேள்விக்கு ஹன்சிகா தனது வெட்கம் கலந்த புன்னகையை பதிலாக அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஹன்சிகா சோகைல் கதூரியா ஜோடி திருமணம் குறித்து தங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டு புறப்பட்டனர்.

நீண்ட காலமாக நண்பர்களாக இருந்த ஹன்சிகா மோத்வானியும் சோஹேல் கதுரியாவும் சமீபத்தில் பிஸினஸ் பார்ட்னர்களாக மாறினர். தொடர்ந்து இவர்களுக்கு இடையில் காதல் மலர்ந்த நிலையில்,  சல ஆண்டுகள் காதலில் இருந்த இவர்கள் கடந்த நவம்பரில், ஈபிள் கோபுரத்தின் முன் ஹன்சிகாவிடம் சோஹேல் தனது காதலை வெளிப்படுத்தினார். இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துகொண்ட ஹன்சிகா”இப்போது மற்றும் எப்போதும்” என்று பதிவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து சங்கீத் மற்றும் ஹால்டி விழாக்களில் வெடித்த பிறகு, டிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த விழாவில் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.

கடைசியாக மஹா படத்தில் நடித்த ஹன்சிகா மோத்வானி நடிப்பில் பார்ட்னர், ரவுடி பேபி, மை நேம் இஸ் ஸ்ருதி, 105, கார்டியன், மற்றும் மை3 போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ள. மேலும் திருமணத்திற்கு பின், தான் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்றும், திருமணம் தனது தொழில் வாழ்க்கையை பரிக்காது என்றும் ஹன்சிகா கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress hansika motwani and sohael kathuriya return to mumbai after wedding

Exit mobile version