scorecardresearch

பிரபல நடிகர் பாலியல் தொல்லை கொடுத்தாரா? உண்மையை உடைத்த ஹன்சிகா

பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளவர் ஹன்சிகா மோத்வானி

Hansika
நடிகை ஹன்சிகா

பிரபல நடிகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியான தகவலுக்கு நடிகை ஹன்சிகா வெளியிட்டுள்ள கோபமான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளவர் ஹன்சிகா மோத்வானி. 2007-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான தேசமுருடு என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ஹன்சிகா தொடர்ந்து மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு திரையுலகின் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த ஹன்சிகா கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தனது நீண்ட நாள் நண்பர் தொழில் பாட்னருமான சோஹைல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.

திருமணத்திற்கு பிறகு படங்களில் பிஸியாக நடித்து வரும் ஹன்சிகா குறித்து ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது பிரபல நடிகர் ஒருவர் ஹன்சிகாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவருக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் ஹன்சிகா நடந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள நடிகை ஹன்சிகா, இது குறித்து என் தரப்பில் இருந்து எந்த தகவலும் சொல்லவில்லை. எந்த பேட்டியும் கொடுக்கவில்லை. ஒரு தகவலை வெளியிடும் முன் அதன் உண்மை தன்மையை அறிந்துகொள்வது நல்லது என தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஹன்சிகாவுக்கு நடிகர் பாலியல் தொல்லை கொடுத்தாக வெளியாக தகவல் பொய் என்று தெரியவந்துள்ளது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்த ஹன்சிகாவுக்கு நடிகர் பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியான தகவலும் அதற்கு ஹன்சிகாவின் கோபமாக ரிப்ளேயும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress hansika motwani angry status about sexual harassment issue