Advertisment
Presenting Partner
Desktop GIF

கணவருடன் புதுவீட்டில் குடியேறிய பிரபல நடிகை

பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி தனது கணவருடன் புது வீட்டில் குடியேறியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்த ஹன்சிகாவிற்கு, அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Actress Hansika

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வனி. மாப்பிள்ளை, வேலாயுதம், சிங்கம் 2, எங்கேயும் காதல், பிரியாணி, ஒரு கல் ஒரு கண்ணாடி, மான் கராத்தே உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் ஹன்சிகா மோத்வானி. இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு தனது நண்பரான சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது, திரைத்துறையில் இருந்து சற்று இடைவேளியில் இருக்கும் ஹன்சிகா, மிகச் சில படங்களிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisment

இந்நிலையில், திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னர், நடிகை ஹன்சிகா தனது கணவருடன் புதிதாக வாங்கியிருக்கும் வீட்டிற்கு குடியேறியுள்ளார். மேலும், இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புது வீட்டில் குடியேறிய ஹன்சிகாவிற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

Entertainment News Tamil Hansika Motwani Hansika
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment