முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் ஹன்சிகா… சென்னை காளிகாம்பாள் கோயிலில் தரிசனம்
இயக்குனர் கண்ணன் இயக்கும் படத்தில் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் நடிகை ஹன்சிகா, சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று ஞாயிற்றுக்கிழமை சாமி தரிசனம் செய்தார்.
இயக்குனர் கண்ணன் இயக்கும் படத்தில் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் நடிகை ஹன்சிகா, சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று ஞாயிற்றுக்கிழமை சாமி தரிசனம் செய்தார்.
இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கியது. கதாநாயகியைக் மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில், நடிகை ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் ஹன்சிகா முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த படம், எமோஷனல், ஹாரர், காமெடி த்ரில்லராக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Advertisment
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த, ஹன்சிகா. தமிழ் சினிமாவில் முன்னணி ஹிரோக்களான விஜய், சிம்பு, சூர்யா, விஷால், சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் நடித்துள்ளார். 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஹன்சிகா தற்போது, தமிழில் 4 படம், தெலுங்கில் 2 படம் என அவர் பிசியாக இருக்கிறார். நடிகை ஹன்சிகா விரைவில் சோஹேல் கதூரியா என்பவரை டிசம்பர் 4-ம் தேதி திருமணம் செய்துக்கொள்ள உள்ளார்.
Advertisment
Advertisements
இந்நிலையில், நடிகை ஹன்சிகா இயக்குனர் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இதையொட்டி, சென்னை காளிகாம்பாள் கோயிலில் ஹன்சிகா ஞாயிற்றுக்கிழமை சிறப்பு தரிசனம் செய்தார். அவருடன் இயக்குனர் கண்ணனும் சிறப்பு தரிசனம் செய்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"