scorecardresearch

ஆஸ்திரியாவில் ஹனிமூன்… கியூட் போட்டோஸ் வெளியிட்ட ஹன்சிகா!

ஹன்சிகா மோத்வானி கடந்த மாதம் பாரிஸில் சோஹைல் ஹன்சிகாவுக்கு ப்ரபோஸ் செய்திருந்தார். இந்த புகைப்படம் சில நாட்களுக்கு முன்பு, இன்ஸ்டாகிராமில் வெளியாகியிருந்தது.

ஆஸ்திரியாவில் ஹனிமூன்… கியூட் போட்டோஸ் வெளியிட்ட ஹன்சிகா!

சமீபத்தில் தொழில் அதிபர் சோஹைல் கதூரியாவை திருமணம் செய்துகொண்ட நடிகை ஹன்சிகா ஆஸ்திரியாவில் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஹன்சிகா மோத்வானி தனது காதலரும் தொழில் பார்ட்னருமான சோஹைல் கதூரியாவை டிசம்பர் 4-ந் தேதி ராஜஸ்தானின் பாரம்பரியமான கோட்டையில் திருமணம் செய்துகொண்டார். நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர்.

இதனிடையே புதுமணத் தம்பதிகள் நேற்று (டிசம்பர் 23) ஆஸ்திரியாவுக்கு புறப்பட்டனர். இங்கு பெல்வெடெரே அரண்மனை மற்றும் ரதாஸ்ப்ளாட்ஸ் சதுக்கத்திற்குச் சென்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். கிறிஸ்மஸ் அலங்காரங்களால் பிரமிக்க வைக்கும் ஆஸ்திரிய தலைநகரில் இருந்து தனது கணவருடன் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

இதில் ஒரு வீடியோவில், பெல்வெடெரே அரண்மனைக்கு முன் ஹன்சிகா தனது கணவருடன்’ உலா வருவதைக் காணலாம். இதில் ஹன்சிகா பிங்க் நிற டாப் மற்றும் கருப்பு நிற ஜீன்ஸ் அணிந்து அழகாக இருக்கிறார். அடுத்து தனது கணவர் சோஹேல் கதுரியாவுடன் மகிழ்ச்சியுடன் கேமராவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இளஞ்சிவப்பு ஸ்வெட்ஷர்ட்களில் இரட்டையர்கள் போல் போஸ் கொடுத்துள்ளனர். ஹன்சிகா தனது கணவரை டேக் செய்து சாண்டா எமோஜியையும் சேர்த்துள்ளார்.

ஹன்சிகா மோத்வானி, தனது இன்ஸ்டாகிராம் கதைகளில், ஆண்டின் இந்த நேரத்தில் இடங்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன என்பதையும் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிடுள்ள வீடியோக்களில் ஹன்சிகா ஒரு பெரிய கிறிஸ்துமஸ் மரத்திற்கு எதிராக போஸ் கொடுத்துள்ளார். ஹன்சிகா மோத்வானியின் இந்த புகைப்படத்திற்கு, சோஹேல் கதுரியா “மை கண்டி, என்ற சிறந்த தலைப்புடன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் எழுதியுள்ளார்.

மேலும் தனது கணவர் வெளியிட்ட பதிவுகளை ஹன்சிகா மறுபகிர்வு செய்தார். ஹன்சிகா மோத்வானியின் இந்த புகைப்படம் கிறிஸ்துமஸ் என்றும், சாண்டா கிளாஸ் உடையணிந்த ஒரு மனிதருடன் மிகவும் அழகாக போஸ் கொடுக்கிறார்.

ஹன்சிகா மோத்வானி கடந்த மாதம் பாரிஸில் சோஹைல் ஹன்சிகாவுக்கு ப்ரபோஸ் செய்திருந்தார். இந்த புகைப்படம் சில நாட்களுக்கு முன்பு, இன்ஸ்டாகிராமில் வெளியாகியிருந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress hansika motwani soheal khaturiya honimoon photos viral