தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகை ஆர்த்தி தலைகீழாக நின்று என்னமா உடற்பயிற்சி செய்கிறார் என்று நெட்டிசன்கள் வியந்து பார்த்துக்கொண்டிருந்த சிறிது நேரத்திலேயே அவரது கணவர் உண்மையை சொல்லிவிட்டார்.
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகைகளில் ஒருவாக வலம் வரும் நடிகை ஆர்த்தி. தனது பருமனையே திரையுலகில் பலமாக மாற்றிக்காட்டியவர். தனுஷ், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நடிகை ஆர்த்தி. தமிழ் சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகையாக தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலால் அமலில் உள்ள இந்த பொது முடக்க காலத்தில், சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள் சமூக ஊடகங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில், நடிகை ஆர்த்தி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஆர்த்தி தலைகிழாக நின்று கடுமையாக உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கிறார். வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், ஆர்த்தி என்னமா உடற்பயிற்சி செய்கிறார் என்று நினைக்கும்போது, “ஏய் எக்ஸைஸ் பண்றமாதிரி ஊரையா ஏமாத்திங்கீற? முதல எழுந்திரிச்சு பெருக்கித்தொலை. ஒடம்பு தானா குறையும்” என்று அவரது கணவர் சொல்ல, நெட்டிசன்கள் ஒரு கணம் ஏமாந்துவிட்டதை உணர்கின்றனர்.
அதற்கு ஆர்த்தி, நான் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வீடியோ எடுத்துக்கொண்டிருக்கிறேன் என்று கூற, அவரது கணவர் “கிழிச்ச, நீ முதல்ல பெருக்கல, மாப்பை தூக்கி தலையில் போட்றுவன்” என்று கூறுகிறார்.
இதையடுத்து, ஆர்த்தி, இது குடும்ப வன்முறை என்று கூறுகிறார்.
நகைச்சுவையான இந்த வீடியோ சமூக ஊடகங்கலில் வைரலாகி வருகிறது.