நடிகை மீரா மிதுன், நடிகர் விஜய் மனைவி சங்கீதா பற்றியும் சூர்யா மனைவி ஜோதிகா பற்றியு அவதூறாகப் பேசியதற்கு நடிகை ஆர்த்தி, தாய்கிழவிக்கு தவடை கிழியும் நேரம் வந்துவிட்டது என்று கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் தனது நடவடிக்கையால் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார்.
அண்மையில் தமிழ் சினிமாவில் நெப்போட்டிஸம் பெரிய அளவில் உள்ளது என்றும் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோர் அனைவருமே நெப்போட்டிஸத் தயாரிப்புகள் என்று மீரா மிதுன் கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால், கோபமடைந்த விஜய், சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்தனர்.
மீரா மிதுன் விஜய் பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என நடிகை சனம் ஷெட்டி மீரா மிதுனைக் கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து, மீரா மிதுன் நடிகர் விஜய் மனைவி சங்கிதாவை பற்றியும் சூர்யா மனைவி பற்றி ஜோதிகா பற்றியும் அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டார். இதையடுத்து, விஜய் ரசிகர்கள் நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காவல்துறையிடம் புகார் அளித்து வருகின்றானர்.
மீரா மிதுனும் விஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிப்பேன் என்று கூறி தொடர்ந்து வீடியோ வெளியிட்டுவருகிறார்.
இந்த நிலையில், நடிகை ஆர்த்தி மீரா மிதுனைக் கண்டித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஆர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “மென்மையான குடும்பத்தலைவி சங்கீதா அக்கா. நடிகையாக இருப்பினும் ஜோ..தீ என்று எல்லா மக்களுக்கும் தெரியும்... தரமற்ற தாய்கிழவிக்கு தவடை கிழியும் நேரம் வந்துவிட்டது... வன்மையாக கண்டிக்கிறேன். பெண் இனத்தின் வெட்கக்கேடு.
இதெல்லாம் மாதர் சங்கம் காதில் கேக்கலையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"