பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-ல் இதுவரை நான் இல்லை: உறுதி செய்த ஹேமா

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ஸ்டாலின் முத்து நடிக்கும் நிலையில், முதல் சீசனில் மீனாவாக நடித்த ஹேமா இதுவரை பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தான் நடிக்க வில்லை என்பதை உறுதி செய்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ஸ்டாலின் முத்து நடிக்கும் நிலையில், முதல் சீசனில் மீனாவாக நடித்த ஹேமா இதுவரை பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தான் நடிக்க வில்லை என்பதை உறுதி செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Hema Rajkumar

சீரியல் நடிகை ஹேமா ராஜ்குமார்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலுக்கான புரோமோ வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ஸ்டாலின் முத்து நடிக்கும் நிலையில், முதல் சீசனில் மீனாவாக நடித்த ஹேமா இதுவரை பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தான் நடிக்க வில்லை என்பதை உறுதி செய்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அண்ணன் தம்பிகள் இடையேயான பாசப் பிணைப்பையும் கூட்டுக் குடும்பத்தின் நன்மைகளையும் சிக்கல்களையும் கதையாகக் கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின் முத்து, வெங்கட் ரெங்கநாதன் மற்றும் குமரன், சுஜிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் ஜீவாவின் மனைவி மீனாவாக, ஹேமா ராஜ்குமார் நடிக்கிறார்.

ஹேமா-வின் கதாபாத்திரம் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு கதாபாத்திரம், ஹேமாவின் யதார்த்தமான நடிப்பால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள் பலரும் இவரைக் கொண்டாடி வருகிறார்கள்.

Advertisment
Advertisements

இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முதல் சீசனில் நடித்த நடிகர்கள், நடிகைகள் அனைவரும் நடிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. புரோமோவில் ஸ்டாலின் முத்து மட்டுமே இருக்கிறார்.

இதனிடையே, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ஹேமா ராஜ்குமார் நடிப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இதுவரை தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்று தெரிவித்துள்ளார். 

இது குறித்து ஹேமா ராஜ்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் என்னைப் பற்றி யாரும் பொய்யான செய்தியைப் பரப்பாதீர்கள். இதுவரை எதுவும் உறுதி செய்யப்படவில்லை. ஏதாவது நல்ல விஷயம் நடந்தால் மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் தெரிவிக்கிறேன். நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், நடிகை ஹேமா நடிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pandian Stores Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: