பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஹேமா ராஜ்குமார் தற்போது சென்னை ஐஐடி மெட்ராஸ் கேம்பஸில் இருந்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமானவர் ஹேமா ராஜ்குமார். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் 2-வது மருமகளாகன இவர், வில்லியா அல்லது நல்லவரா என்ற குழப்பம் சீரியலின் தீவிர ரசிகர்களுக்கு எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த அளவிற்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
நடிப்பு மட்டுமல்லாமல் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஹேமா ராஜ்குமார் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதேபோல் ஹேமாஸ் டைரி என்ற யூடியூப் சேனலில் விழிப்புணர்வு தொடர்பான வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது சென்னை ஐஐடி மெட்ராஸில் இருந்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஐஐடி மெட்ராஸில் உள்ள கோர்ஸ் குறித்து அங்கு இருக்கும் ஊழியர்களிடம் பேட்டி எடுத்துள்ளார். இதில் சான்றிதழ் பெறும் கோர்ஸ், வேலைக்கு செல்லும் வகையில் அதிக நாட்கள் படிக்கும் கோர்ஸ் என பல வகைகள் உள்ளதாக கூறியுள்ளனர்.
இங்கு படிக்க வேண்டும் என்றால் இஞ்சினியரிங் படித்த மாணவர்கள் மட்டுமே சீட் வழங்கப்படும் என்றும், சேர்ந்து விட்டு படிக்காமல் சான்றிதழ் மட்டும் வேண்டும் என்றால் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படாது. அதேபோல் இங்கு படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் தாய் மொழியிலேயே கற்றுத்தரப்படுகிறது என்றும் அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கு படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு எப்படி கிடைக்கும் என்பது குறித்து வேலை வாய்ப்புக்காக அவர்களுக்கு என்னனென்ன ஏற்பாடுகள் செய்யப்படுகிறது என்பது குறித்தும் விளக்கம் அறித்துள்ள ஊழியர், சிப்ஜிடிபி என்றால் என்ன என்றும் விளக்கம் அளித்துள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“