Advertisment

கொடைக்கானலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: ஸ்கூப் நியூஸ் சொன்ன ஹேமா

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற உள்ளதாக நடிகை ஹேமா ஸ்கூப் நியூஸ் கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
hema 1

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை ஹேமா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற உள்ளதாக நடிகை ஹேமா ஸ்கூப் நியூஸ் கொடுத்துள்ளார்.

Advertisment

விஜய் டிவியில் ரசிகர்களுடன் பெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அந்த சீரியலுக்கு கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலை ரசிகர்கள் சுறுக்கமாக பி.எஸ் 2 என்று அழைக்கின்றனர். 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில், முதல் சீசனில் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்த ஸ்டாலின், மீனாவாக நடித்த நடிகை ஹேமா, அவருடைய பெற்றோர்களாக நடித்தவர்கள் மட்டுமே நடிக்கிறார்கள். மற்ற நடிகர்கள் அனைவருமே புதுமுகங்கள். முக்கிய கதாபாத்திரத்தில் நிரோஷா நடிக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில், மீனாவாக நடிக்கும் ஹேமாவுக்கு மூர்த்தியின் மகன் கதிர் உடன் பெற்றோர்களின் எதிர்ப்பைத் தாண்டி காதல் திருமணம் திருமணம் நடந்துள்ளது. மாமனார் வீட்டில் சின்ன சின்ன மாற்றங்களைச் செய்கிறார். இந்த வார எபிசோடில், மீனா தனது கணவருடன் சினிமாவுக்கு செல்கிறார்.

 

இந்நிலையில், பி.எஸ் - 2 சீரியலில் மீனாவாக நடிக்கும் ஹேமா தனது ஹேமா’ஸ் டைரி யூடியூப் சேனலில், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஷூட்டிங் பற்றி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தனது ஷூட்டிங் ஸ்பாட் உணவுமுறை குறித்து பேசியுள்ள ஹேமா, நேற்று வடபழனி, இ.சி.ஆரில் ஷூட்டிங் நடந்ததாகவும் அடுத்து கொடைக்கானல் செல்ல உள்ளதாகவும் இதை யாரிடமும் சொல்லாதீர்கள் என்று தெரிவித்துள்ளார். 

இதன் மூலம், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடக்க உள்ளதாக ஹேமா ஸ்கூப் நியூஸ் கொடுத்துள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pandian Stores Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment