scorecardresearch

பேபி பம்ப் போட்டோஸ் ரிலீஸ் செய்த இலியானா: கணவர் ரகசியத்தை இன்னும் சொல்லவே இல்லை!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலியானா தான் கர்ப்பமாக இருப்பதாக திடீர் அறிப்பை வெளியிட்டார்.

Ileyana
நடிகை இலியான புகைப்படங்கள்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருக்கதாக அறிவித்த நடிகை இலியான தற்போது கர்ப்பமாக வயிற்றுடன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கணவர் யார் என்று சொல்லவே இல்லையே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கடந்த 2006-ம் ஆண்டு தமிழில் வெளியான கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமான இலியானா, தொடர்ந்து தமிழ் தெலுங்கு இந்தி உள்ளிட்டழ மொழிகளில் பல படங்களில் நடித்திருந்தார். அதேபோல் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழில் கேடி, நண்பன் என இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இலியானாவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

தற்போது இந்தியில் கவனம் செலுத்தி வரும் இலியானா அன்ஃபேர் அன்ட் லவ்லி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில, இலியான புகைப்பட கலைஞர் ஆண்ட்ரோ நீபோன் என்பரை காதலித்து வருவதாகன கூறப்பட்ட நிலையில், அடுத்த சில மாதங்களில் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து இலியானா நடிகை கத்ரீனா கைஃப் சகோதரருடன் டேட்டிங்கில் இருப்பதாக கூறப்பட்டது.

இதுவரை இலியானா திருமணம் செய்துகொண்டதாக எந்த தகவலும் வெளியாகாத நிலையில்,  கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக திடீர் அறிப்பை வெளியிட்டார். இதனால் ரசிகர்கள் ஷாக் ஆனாலும் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்தனர். ஆனாலும் தற்போதுவரை தனது கணவர் யார் என்ற தகவலை வெளியிடாத இலியானா தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போது கர்ப்பமாக இருக்கும் இலியான முதல் முறையாக பேபிபம்ப போட்டோஷூட் படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் லைக்சுடன் சேர்த்து தங்களது காமெண்ட்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress ileana d cruz release baby bumb photos on instagram