Bigg Boss Poornima: நடிகை இந்துஜா பார்க்கிங் படத்தின் ப்ரோமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்த நிலையில், தனது நெருங்கிய தோழியான பிக் பாஸ் போட்டியாளர் பூர்ணிமாவை இன்ஸ்டாவில் அன்ஃபாலோ செய்துள்ளார்.
விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி போட்டியாளர்கள் இடையே சண்டை சச்சரவுகளுடன் நடந்து வருகிறது. தினம் ஒரு புதிய திருப்பம், புதிய டாஸ்க், புதிய கேம் என்று சுவாரஸ்த்தைக் கூட்டி வருகின்றனர்.
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக உள்ள பூர்ணிமா ரசிகர்கள் இடையே அதிருப்தியைப் பெற்று வருகிறார். யூட்யூபில் வீடியோக்கள் மூலம் பிரபலமான பூர்ணிமா பிக் பாஸ் வீட்டிற்குள் செல்கிறார் என்ற தகவல் வெளியானபோது அவருடைய ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற முதல் வாரத்தில் இருந்தே பூர்ணிமா தனது தனித்துவமான பேச்சு மற்றும் சக போட்டியாளர்களை அணுகிய விதத்தில் சக போட்டியாளர்கள் இடையேயும் பார்வையாளர்கள் மத்தியிலும் கவனம் பெற்று பிரபலமானார்.
பிக் பாஸ் வீட்டில் ஒருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் கேப்டன் ஆக வேண்டும் என்று போட்டிபோட்க்கொண்டு இருக்கும்போது, பூர்ணிமா இரண்டு முறை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் கேப்டனாகவும் பொறுப்பேற்றார். ஒரு பெண் போட்டியாளர் பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து இரண்டு முறை கேப்டனானது இதுவே முதல் முறை. இப்படி, ரசிகர்கள் மத்தியிலும் பார்வையாளர்கள் மத்தியிலும் பூர்ணிமா நல்ல பெயரைப் பெற்று வந்தார். ஆனால், யார் கண் பட்டதோ தெரியவில்லை, பூர்ணிமா சக போட்டியாளர் மாயாவுடன் கூட்டணி சேர்ந்ததிலிருந்து பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களிடமும் அவப் பெயரை பெற்று வருகிறார்.
பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா, விசித்ரா போன்ற சக போட்டியாளர்களை புல்லிங் செய்து வேண்டுமென்றே டார்கெட் செய்ததில் இருந்து பூர்ணிமா கெட்ட பெயர் வாங்கியுள்ளார். கடந்த வார இறுதியில் கமலிடம் திட்டு வாங்கியும் பூர்ணிமா திருந்தவில்லை. அதற்கு மாறாக, பூர்ணிமா தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் ஏன் இப்படி நடக்கிறது என்று தெரியவில்லை என்றும் தினமும் புலம்பி வருகிறார்.
இந்நிலையில் இந்த வாரம் வெளியாகும் பார்க்கிங் படத்திற்காக ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை இந்துஜா பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தனர்.
நடிகை இந்துஜாவும் பூர்ணிமாவும் கல்லூரி காலத்தில் இருந்து தோழிகள் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற இந்துஜா பூர்ணிமாவிடம் சரியாக பேசவில்லை என்று பூர்ணிமா சக பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களிடம் கூறியிருந்தார்.
இதைப் பற்றி இந்துஜாவிடமும் பூர்ணிமா கேட்டார், அதற்கு நடிகை இந்துஜா அனைவரிடமும் ஒரே மாதிரி பழக வேண்டும் என்பதற்காக தான் உனக்கு தனி முன்னுரிமை அளிக்கவில்லை என்று கூறிச் சென்றார். இருப்பினும் பூர்ணிமா திரும்பத் திரும்ப இந்துஜா தனது நண்பர், நெருங்கிய தோழி. ஆனாலும், என்னை கண்டுக்காமல் சென்று விட்டார் என்று புலம்பி வந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகை இந்துஜா இன்ஸ்டாகிராமில் பூர்ணிமாவை அன்ஃபாலோ செய்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் பூர்ணிமா இப்படி பேசியதால்தான் இந்துஜா பூர்ணிமாவே அன்ஃபாலோ செய்திருக்கிறார் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். கல்லூரித் தோழியே இன்ஸ்டாவில் அன்ஃபாலோ செய்கிற அளவுக்கு பூர்ணிமா பிக் பாஸ் வீட்டில் தலைகீழாக மாறிவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“