சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியன் இயக்குனர் வெற்றிமாறன் படத்தின் நாயகன் என்ற அடையாளத்துடன் வலம் வருபவர் நடிகர் சூரி. தற்போது காமெடியானாகவும், நாயகனாகவும் நடித்து வரும் சூரி இன்று தனது 45-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
அவருக்கு சக நடிகர்கள் மற்கும் திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி வருகினறனர். அந்த வகையில் காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சூரிக்கு வித்தியாசமான முறையில் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கால்பந்து வீராங்கனையாக நடித்து கவனத்தை ஈர்த்த இந்திரஜா, அதன்பிறகு தெலுங்கு படம் ஒன்றில் நடித்தார். சிறந்த பரதநாட்டிய கலைஞரான இந்திரஜா, ஜீ தமிழில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இந்திரஜா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் தனது திறமையை நிரூபிக்கும் வகையிலான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதனிடையே சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படத்தில், நாயகி அதிதியின் தோழியாக நடித்திருந்தார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விருமன் படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டார். அதேபோல் இசைவெளியீட்டு விழாவில் பேசிய சூரி இந்திரஜா நடிப்பு குறித்து பேசினார். அப்போது படத்தின் ஒரு காட்சிக்காக இந்திரஜா தன்தை இடுப்பில் தூக்கி வைத்ததாக கூறியிருந்தார். அப்போது சூரி பேசியது பெரிய வைரலாக பரவியது
இதனிடையே தற்போது சூரிக்கு வாழ்த்து சொல்லும் விதமாக அவரை இடுப்பில் தூக்கி வைத்துள்ள போட்டோவை வெளியிட்டுள்ள இந்திரஜா உங்களோட வொர்க் பண்ணது ரொம்ப சந்தோஷம் மாமா… உங்கள் கையில் வளர்ந்து இன்று உங்களுடனே நடிப்பது பாக்கியம் மற்றும் பெருமை மாமா….. குத்துகள்ளு…… கொலவிக்கள்ளூ……. என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.
இந்திரஜாவின் இந்த போஸ்ட்டுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. ஒரு பக்கம் சூரிக்கு பிறந்தநாள் வாழ்த்து, மற்றொரு பக்கம் இந்திரஜாவிற்கு பாராட்டு என ரசிகர்கள் இந்த பதிவுகளை வைரலாக்கி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil