Advertisment

விஜய், அரவிந்த் சாமியுடன் நடித்த பிரபல நடிகை பாஜகவில் சேர்ந்தார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Isha Koppikar joins bjp, இஷா கோபிகர்

Isha Koppikar joins bjp, இஷா கோபிகர்

விஜய் மற்றும் அரவிந்த் சாமி என முண்ணனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை இஷா கோபிகர் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

Advertisment

2002 ஆம் ஆண்டு ராம்கோபால் வர்மாவின் கம்பெனி என்ற படத்தின் மூலம் அறிமுகமான இஷா, தமிழில் நடிகர் அரவிந்சாமியுடன் என் சுவாசக்காற்றே, நடிகர் விஜய் உடன் நெஞ்சினிலே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

பாஜகவில் இணைந்த இஷா கோபிகர்

என் சுவாசக் காற்றே, நெஞ்சினிலே உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள இஷா கோபிகர் மத்திய மந்திரி நிதின் கட்காரி முன்னிலையில் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார். இந்தியில் மிகவும் பிரபலமான நடிகை என பெயரெடுத்த இஷா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் அதிகமாக நடித்துள்ளார்.

தமிழில் அரவிந்த்சாமி ஜோடியாக என் சுவாசக் காற்றே படத்திலும், விஜய் ஜோடியாக நெஞ்சினிலே படத்திலும் நடித்துள்ள இஷா, தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் எஸ்.கே.14 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், மகராஷ்டிரம் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி முன்னிலையில் இஷா கோபிகர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment