பிரபல இந்தி நடிகை இஷா கோபிகர். இவர் பிரசாந்த்தின் காதல் கவிதை, அரவிந்தசாமியின் என் சுவாசக் காற்றே, விஜயகாந்த்தின் நரசிம்மா, விஜய்யின் நெஞ்சினிலே உள்ளிட சில தமிழ் சினிமாக்களில் நடித்துள்ளார். நடிகை இஷா கோபிகர், தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி மொழி என பலமொழி படங்களிலும் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்' படத்தில் இஷா கோபிகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இஷா கோபிகர் கடந்த 2009 -ம் ஆண்டு தொழிலதிபர் திம்மி நரங்க் என்பவரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆனார். இவர்களுக்கு ரியன்னா என்ற மகள் இருக்கிறார்.
இந்நிலையில் இஷா கோபிகர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரைப் பிரிந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இருவீட்டாரும், இவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்ததால், இஷா கோபிகர் தற்போது மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
விஜய் பட நாயகி பிரபல இந்தி நடிகை இஷா கோபிகர் தனது கணவரை விட்டு பிரிந்த செய்தி இந்திய சினிமா உலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“