/indian-express-tamil/media/media_files/2025/09/21/zubair-2025-09-21-12-41-30.jpg)
ரூ. 250 கோடி சொத்து... சீரியலில் ஒரு எபிசோடுக்கு ரூ.18 லட்சம் வாங்கும் இளம் நடிகை; யார் தெரியுமா?
திரைத்துறையை போன்று சீரியல் நடிகைகளுக்கும் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தினம் தினம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சீரியலை பார்ப்பதற்கு என்று ரசிகர்கள் பலர் உள்ளனர். அதுமட்டுமல்லாமல், திரைத்துறையை போன்று சீரியல் நடிகைகளுக்கும் சம்பளத்தை வாரி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
அதாவது, ஒரு நடிகை ஒரு தொலைக்காட்சியில் மட்டுமல்லாமல் பல தொலைக்காட்சியில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் அவர்களுக்கு சம்பவளமும் தேவைக்கேற்ப வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் 23 வயதான இளம் நடிகை ஒருவர் ஒரு எபிசோடுக்கு 18 லட்சம் ரூபாய் வாங்குவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
23 வயதில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் ஜன்னத் ஜுபைர் ரஹ்மானி. மும்பையில் பிறந்த இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது கனவாக இருந்துள்ளது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு முடிந்ததும் சினிமாவில் ஆர்வம் காட்ட தொடங்கினார்.
கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டு வரை ஸ்டார் ஒன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான
’Star One's medical romance Dill Mill Gayye’ என்ற தொடரில் தமன்னாவின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிகை ஜன்னத் ஜுபைர் ரஹ்மானி நடித்திருந்தார்.
'தில் மில் கே', 'காசி: அப் நா ரஹே தேரா கக்கா கோரா', 'ஃபுல்வா', 'மஹாராணா பிரதாப்', 'து ஆஷிகி', 'பியர் ஃபைல்ஸ்' உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஜன்னத் ஜுபைர் இடம்பெற்றார். இதில், 'காசி: அப் நா ரஹே தேரா கக்கா கோரா'வில் நடித்ததன் மூலம் பிரபலமானார். ஜன்னத் ஜுபைர் ரஹ்மானி, ராணி முகர்ஜி கதாநாயகியாக நடித்த 'ஹிச்கி' படத்திலும் நடித்துள்ளார்.
'ஃபியர் ஃபேக்டர் கத்ரோன் கே கிலாடி 12' மற்றும் 'சிரிப்பு செஃப்' போன்ற பல ரியாலிட்டி ஷோக்களிலும் ஜன்னத் பங்கேற்றுள்ளார். இது தவிர, பல தனியார் ஆல்பங்களிலும் இவர் நடித்துள்ளார். இவருக்கு சமூக வலைதளத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானை விட அதிக பாலோவர்ஸ்கள் உள்ளனர்.
இந்நிலையில், நடிகை ஜன்னத் 'கத்ரோன் கே கிலாடி' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு எபிசோடிற்கு 18 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல்,
'நவ்வு செஃப்' ஒரு எபிசோடிற்கு ரூ.2 லட்சமும், சமூக ஊடகங்களில் ஒவ்வொரு பதிவிற்கும் ரூ.1.5 முதல் ரூ.2 லட்சம் வரை பெறுவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகை ஜன்னத் தன் இளம் வயதில் மும்பையில் சொந்த வீட்டை வாங்கியுள்ளார் என்றும் அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.250 கோடி என்றும் கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.