தான் அளித்த புகாரை ஏற்று பாடலாசிரியர் சினேகன் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக நடிகை ஜெயலட்சுமி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
சினேகம் அறக்கட்டளை தொடர்பாக பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருப்பாளருமான சினேகன் அளித்த புகாரில், நடிகையும் பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமி சினேகம் அறக்கட்ளை சார்பில், எனது பெயரை பயன்படுத்தி பலரிடம் பண மோசடி செய்துள்ளதாக புகார் அளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த புகாருக்கு பதிலடியாக நடிகை ஜெயலட்சுமியும் சினேகன் மீது புகார் அளித்திருந்தார். இருவரும் மாறி மாறி புகார் அளித்ததை தொடர்ந்து இருவரையும் அழைத்த போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு இது குறித்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில். இன்று நடிகை ஜெயலட்சுமி சினேகன் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இது தொடர்பான சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
சினேகம் அறக்கட்டளை மூலம் பணமோசடி செய்துள்ளதாக பாடலாசிரியர் சினேகன் என்மீது பொய் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பான ஆணையர் அலுவலகத்தில் இருந்து 3 முறை விசாரணைக்கு அழைத்தும் சினேகன் மீது வழக்கு பதிவு செய்ய மறுத்துவிட்டனர். ஆனால் எவ்வித ஆதாரமும் இல்லாமல் சினேகன் என்மீது பொய் புகார் அளித்துள்ளதால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.
மேலும் அவர் இது குறித்து எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் எனக்கு எந்த நோட்டீசும் வரவில்லை. அவர் என்னிடம் பேச வந்தது போது அவரை தனிமையில் காபி சாப்பிட அழைத்தாகவும் கூறியுள்ளார், இதற்காக நீதி வேண்டி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கில் என் மீது பொய் புகார் அளித்த சினேகன் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு சமூகவலைதளம் மற்றும் பொதுவெளியில் என்னைப்பற்றி அவதூறாக பேசி வரும் அனைவருக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த வழக்கில் அடுத்த மாதம் 19-ந் தேதிக்குள் பாடலாசிரியர் சினேகன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால், அண்ணா நகர் துணை ஆணையர், மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமங்கலம் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“