/tamil-ie/media/media_files/uploads/2019/11/Jayalakshmi-Joined-BJP.jpg)
Jayalakshmi Joined BJP
Actress Jayalakshmi Joined BJP: ‘பிரிவோம் சந்திப்போம்‘ சந்திப்போம் படத்தில் அறிமுகமாகி, ‘குற்றம் 23’, ‘விசாரணை’, ‘அப்பா’, ’முத்துக்கு முத்தாக’, ‘கோரிப்பாளையம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஜெயலட்சுமி. அதோடு நடிகர் விஜய் நடித்த வேட்டைக்காரன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். அடிப்படையில் வழக்கறிஞரான இவர், ‘பிரியமானவள்’, ‘முள்ளும் மலரும்’ ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் பாஜக-வின் முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜக-வில் இணைந்துள்ளார் ஜெயலட்சுமி. இதுகுறித்துப் பேசிய ஜெயலட்சுமியின் வழக்கறிஞர் சார்லஸ், “அண்மையில் பிரபலங்களுக்கு எதிராக `மீ டூ ' என்ற இயக்கத்தின் மூலம் அதிர்ச்சிகர குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தனர் சினிமா உலகைச் சேர்ந்த பெண்மணிகள் சிலர். நாடு முழுவதும் `மீ டூ ' புகார்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. இதுபோன்ற குற்றங்களைத் தடுக்குமாறு சென்னை போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தவர் நடிகை ஜெயலட்சுமி.
2018-ல் ஜெயலட்சுமிக்கு வாட்ஸ் அப்பில் பாலியல் ரீதியான தகவல் அனுப்பப்பட்டது. அது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்தனர். இந்தியாவில் நடந்துவரும் பா.ஜ.க-வின் ஆட்சி மீது ஏற்பட்ட நம்பிக்கை, பிரதமர் நரேந்திரமோடியின் மீதான ஈர்ப்பு ஆகிய காரணங்களுக்காக பா.ஜ.க-வில் அவர் இணைந்துள்ளார்” என்றார். பின்னர் நேற்று பா.ஜ.க-வின் அலுவலகமான கமலாலயத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்த ஜெயலட்சுமி, ’தமிழக பாஜக மூலம் மக்கள் பணியாற்றுவதே எனது ஆசை’ என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.