தமிழ் மற்றும் இந்தி சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஸ்ரீதேவி வாங்கிய முதல் வீட்டை அவரது மகள் ஜான்வி கபூர் சுற்றிப்பார்த்த வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
Advertisment
தமிழக்தின் தென்பகுதியை பூர்வீகமாக கொண்ட நடிகை ஸ்ரீதேவி, தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இதனிடையே கடந்த 2018-ம் ஆண்டு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற ஸ்ரீதேவி திடீரென மரணமடைந்தார். அவரது மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், தான் பிஸியாக இருந்து வந்தாலும் தனக்கான நேரம் ஒதுக்கி ஜான்வி கபூர் தனது சென்னை வீட்டைச் சுற்றிப்பார்த்துள்ளார். இது தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ள அவர், "வணக்கம் நண்பர்களே, எனது சென்னை வீட்டிற்கு வருக என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் ஜான்வி காட்டிய முதல் இடம் அவரது அப்பா போனி கபூரின் அலுவலகம். மேலும் இந்த வீடு தனது அம்மா வாங்கிய முதல் வீடு என்றும் ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.
இந்த வீட்டை , அவர் வாங்கியபோது மிகவும் வித்தியாசமாக இருந்தது, திருமணமான பிறகு இந்த வீட்டை வாங்கினார் என்றும் கூறியுள்ள அவர், அந்த வீட்டில் ஸ்ரீதேவி வரைந்த பல ஓவியங்களை ஜான்வி காட்டினார். தொடர்ந்து அவரின் சாப்பாட்டு அறை, உடற்பயிற்சி கூடம், படுக்கையறை, ஒரு "ரகசிய அறை" மற்றும் வீட்டின் அவளுக்குப் பிடித்த மூலையில் - "ஒரு நினைவுச் சுவர்" ஆகியவற்றையும் காட்டியுள்ளார்.
Advertisment
Advertisements
தொடர்ந்து அம்மா மற்றும் அப்பாவின் திருமண புகைப்படத்தை கான்பிக்கும் அவர், இது ஒருவித ரகசிய திருமணம் என்று நான் நினைக்கிறேன், அதனால் தான் அவர்கள் மிகவும் அழுத்தமாக இருப்பதாகத் தெரிகிறது என்று கூறியுள்ளார். இந்த போட்டோ சுவர் "உண்மையில் அம்மாவின் யோசனை" என்று ஜான்வி கபூர் தெரிவித்தார்.
"ரகசிய அறை" பற்றி குறிப்பிட்ட ஜான்வி கபூர், அறையில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை." நான் எனது சகோதரியுடன் (குஷி கபூர்) பெரும்பாலான நேரத்தை இங்கே செலவிடுகிறேன்" என்று கூறியுள்ளார். அதன்பிறகு மொட்டை மாடிக்குப் செல்லும், ஜான்வி கபூர் அடுத்து தனது ஜிம்மைக் காட்டி, அதை தனது "சரணாலயம்" என்று கூறியுள்ளார். அந்த பகுதியில் உள்ள சுவரில் உள்ள அனைத்து ஓவியங்களும் தானும் தனது சகோதரி குஷியும் சேர்ந்து வரைந்தவை என்பதை அவர் வெளிப்படுத்தினார்.
பாலிவுட் சினிமாவில் தற்போது பிஸியாக நடித்து வரும் ஜான்வி கபூர், கடைசியாக மிலி என்ற படத்தில் நடித்திருந்தார். தடக், ரூஹி, குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள், கோஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் குட்லக் ஜெர்ரி நடித்துள்ள இவர், தோஸ்தானா 2, பவால் மற்றும் மிஸ்டர் அன்ட் மிஸஸ் மஹி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
5 தசாப்தங்களுக்கும் மேலாக 300 படங்களில் நடித்த ஸ்ரீதேவி, கடைசியாக 2017-ம் ஆண்டு வெளியான மாம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக அவருக்கு 2018 இல் அவரது மரணத்திற்குப் பின் சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“