Advertisment

தலை முழுக்க நரைத்து... ஆளே தெரியாமல் மாறிப்போன வடிவேலு காம்பினேஷன் நடிகை!

சுந்தர்.சி-யுடன் தலைநகரம் படத்தில் நடித்தவரா இவர்? இணையத்தில் வைரலாகும் நடிகை ஜோதிர்மயி-யின் லேட்டஸ்ட் லுக்; ரசிகர்கள் ஷாக்

author-image
WebDesk
New Update
jyothirmayi

நடிகை ஜோதிர்மயி-யின் லேட்டஸ்ட் லுக்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தலைநகரம் பட நடிகை ஜோதிர்மயியின் லேட்டஸ்ட் லுக் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சுராஜ் இயக்கிய தலைநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ஜோதிர்மயி. மலையாளப் படங்களில் நடித்து வந்த ஜோதிர்மயி, இதயத் திருடன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் தலைநகரம் படத்தில் சுந்தர் சி-க்கு ஜோடியாக திவ்யா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் வடிவேலு உடன் அவர் நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தலைநகரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ஜோதிர்மயிக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. விஜயகாந்த் ஜோடியாக சபரி, ஜீவனுடன் நான் அவன் இல்லை, சத்யராஜ் உடன் பெரியார், சந்தானத்தின் அறை எண் 305-ல் கடவுள், வெடிகுண்டு முருகேசன் போன்ற படங்களில் ஜோதிர்மயி நடித்தார்.

மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வந்த ஜோதிர்மயிக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு நிஷாந்த் குமார் என்பவருடன் திருமணம் ஆனது. ஆறு ஆண்டுகள் மட்டுமே நீடித்த இவர்களது இல்லற வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. கடந்த 2010 ஆம் ஆண்டு தனது முதல் கணவர் நிஷாந்த் குமாரை ஜோதிர்மயி விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

பின்னர் மலையாள இயக்குனர் அமல் நீரத் என்பவரை கடந்த 2015 ஆம் ஆண்டு மறுமணம் செய்துகொண்ட ஜோதிர்மயி, தற்போது மலையாளப் படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ஜோதிர்மயி, மொட்டைத் தலையுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது.

இந்தநிலையில், நடிகை ஜோதிர்மயியின் லேட்டஸ்ட் லுக் போட்டோஸ் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தற்போது பரவி வரும் லேட்டஸ்ட் புகைப்படத்தில் நடிகை ஜோதிர்மயி, தலைமுடி முழுவதுமாக நரைத்து வயதானவர் போல காட்சியளிக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் தலைநகரம் பட நாயகியா இப்படி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டார் என வாயடைத்துப் போய் உள்ளனர். ஜோதிர்மயி-யின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment