New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Jyotika-gym-work-out.jpg)
352 கிலோ எடையை அசால்ட்டாக தூக்கும் ஜோதிகா; ஜிம் ஒர்க் அவுட் வைரல் வீடியோ
352 கிலோ எடையை அசால்ட்டாக தூக்கும் ஜோதிகா; ஜிம் ஒர்க் அவுட் வைரல் வீடியோ
352 கிலோ எடையை அசால்ட்டாக தூக்கும் ஜோதிகா; ஜிம் ஒர்க் அவுட் வைரல் வீடியோ
நடிகை ஜோதிகா ஜிம்மில் தீவிரமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. அன்று முதல் இன்று வரை ஜோதிகா நடிப்புக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. திருமணத்திற்கு பிறகு தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜோதிகா நடிப்பில் கடைசியாக உடன்பிறப்பே எனும் திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்தது. இதன்பின் இவர் நடித்து வரும் திரைப்படம் தான் காதல் தி கோர். இந்தப் படத்தில் மம்மூட்டி கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து பாலிவுட்டிலும் சில படங்களை ஜோதிகா கைவசம் வைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்: ‘அஞ்சலி பாப்பா’ இப்போ எவ்ளோ பெரிய ஓவியர் தெரியுமா? சென்னை கண்காட்சிக்கு மணிரத்னம், ஏ.ஆர் ரகுமான் வருகை
சமீபகாலமாக ஜிம் ஒர்க் அவுட்டில் முழு கவனம் செலுத்தி வரும் ஜோதிகா, அந்த வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் லேட்டஸ்ட் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை ஜோதிகா வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பளு தூக்குதல் உள்ளிட்ட கடினமான பயிற்சிகளை ஜோதிகா செய்துள்ளார். 82 கிலோ முதல் 352 கிலோ வரையிலான எடையை ஜோதிகா அசால்ட்டாக தூக்கும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர். 44 வயதாகும் நடிகை ஜோதிகாவின் இந்த வெறித்தனமான ஒர்க் அவுட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோக்களுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி, சரத்குமார், மாதவன், ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் லைக் செய்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.