விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் இருந்து, புதிய முல்லை… காவியா அறிவுமணி விலக வாய்ப்புள்ளதாக கூறப்படும் தகவல் ரசிகர்கள் அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தெலுங்கில் 'வடிநம்மா' என்ற பெயரிலும், கன்னடத்தில் 'வரலக்ஷ்மி ஸ்டோர்ஸ்' என்று 8 மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களை ஈர்த்ததில் முக்கிய காரணமாக இருந்தவர்கள் முல்லை - கதிர் ஜோடிதான். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முதலில் முல்லையாக விஜே சித்ரா, கடந்த ஆண்டு சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
விஜே சித்ராவின் மறைவுக்கு பிறகு, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில், 'பாரதி கண்ணம்மா' சீரியலில் நடித்து வந்த காவியா அறிவுமணி நடிக்கத் தொடங்கினார்.
காவியா அறிவுமணி, முதலில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாவிட்டாலும் போகப்போக ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.
இந்த நிலையில்தான், காவியா அறிவுமணி 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி ரசிகரகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
பிக் பாஸ் பிரபலம் கவின் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற லிப்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து, கவின், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரிப்பில் 'ஊர் குருவி' திரைப்படம் உருவாகிறது. இந்த படத்தில், நடிக்க காவியா அறிவுமணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் காவியா அறிவுமணீ கவினுக்கு ஜோடியாக காவியா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதனால், காவியா அறிவுமணி பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், காவியா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுவது குறித்து இதுவரை அதிகார பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இருப்பினும், ரசிகர்களின் மனம் கவர்ந்த முல்லை காவியா அறிவுமணி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு பை பை சொல்லப்போகிறாரா என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"