என் மனைவி கஜோல் நம்பரை இதற்காக தான் வெளியிட்டேன்... அஜய் விளக்கம்! இது என்ன விளையாட்டு மிஸ்டர்?

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் மனைவி நடிகை கஜோல் செல்போன் நம்பர் வெளியிட்டது ஏன் என கூறியுள்ளார்.

பாலிவுட்டில் பெரிய புகழை சம்பாதித்துள்ள ஜோடி தான் அஜய் தேவ்கன் மற்றும் கஜோல். பிரபல பாலிவுட் நடிகர்களான இருவரும் 1999ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். கோலிவுட்டின் பிரபல காதல் ஜோடியாக நாம் எவ்வாறு சூர்யா – ஜோதிகாவை கூறுகிறோமோ அதே போல் தான் பாலிவுட்டில் அஜய் மற்றும் கஜோலை அழைப்பார்கள்.

கஜோல் செல்போன் நம்பரை டுவிட்டரில் பகிர்ந்த அஜய் தேவ்கான் :

பொதுவாகவே ஒருவர் புகழை சம்பாதித்துவிட்டால், அவர்கள் தனிபட்ட விவரங்கள் மிகப்பெரிய ரகசியமாக காக்கப்படும். அதிலும் ஒருவரின் செல்போன் நம்பர் பல காரணங்களுக்காக ரகசியமாக வைத்துக்கொள்வது அவசியம்.

பொதுமக்களே தங்களின் செல்போன் நம்பரை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தி வரும் நிலையில், கஜோலின் கணவர் அஜய் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் செல்போன் நம்பரை ஒன்றை வெளியிட்டார்.

அந்த டுவிட்டில், என் மனைவி கஜோல் தற்போது வெளியூர் சென்றிருக்கிறார். அவரை தொடர்புகொள்ள இந்த செல்போன் நம்பரை பிரயோகிக்கலாம் என்று கூறியிருந்தார். இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவியது.

அதிர்ச்சியடைந்த பலரும் அஜய்க்கு அறிவுரை வழங்கினர். இது போன்று செல்போன் நம்பரை பகிர்வதால் ஆபத்துகள் ஏற்படலாம், யார் வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு பேசலாம் என்று கூறிவந்தனர். மற்றும் சிலர் அந்த நம்பரை சேவ் செய்து மெசேஜ்களும் அனுப்பி வந்தனர்.

இந்நிலையில், தனது மனைவி நம்பரை எதற்காக பகிர்ந்தேன் என்று அஜய் விளக்கமளித்துள்ளார். அதில், “நான் இந்த நம்பரை உங்களை கேலி செய்யவே பகிர்ந்தேன். ஒரு திரைப்படத்திற்காக நிகழ்த்தப்பட்ட விளையாட்டு இது” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த பார்த்த பலரும், ‘என்ன விளையாட்டு இது அஜய்’ என்றும், மற்றும் சிலர் ‘சூப்பர் பிரேங்க்’ என்றும் கூறி வருகின்றனர். விளையாட்டாக இருப்பினும், இது போன்ற நம்பர்களை இணையதளத்தில் வெளியிடுவது பெரும் ஆபத்து என்று நிபுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close