‘சினிமாவை விட்டு விலக இதுதான் காரணம்’ நடிகை கல்யாணி மி டூ புகார்

நடிகை கல்யாணி சினிமாவில் நடிக்க கூடாது என்று முடிவெடுத்ததற்கு காரணம் குறித்தும் ஒரு தொலைக்காட்சி சேனல் புரோகிராம் ஹெட் தன்னை பப்புக்கு அழைத்தார் என்று மி டூ புகார் கூறியுள்ளார்.

By: Updated: May 28, 2020, 09:24:28 PM

நடிகை கல்யாணி சினிமாவில் நடிக்க கூடாது என்று முடிவெடுத்ததற்கு காரணம் குறித்தும் ஒரு தொலைக்காட்சி சேனல் புரோகிராம் ஹெட் தன்னை பப்புக்கு அழைத்தார் என்று மி டூ புகார் கூறியுள்ளார்.

பிரபு தேவா லைலா நடித்த அள்ளித்தந்த வானம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை கல்யாணி. இவருடைய இயற்பெயர் பூர்ணிதா. கல்யாணி ஜெயம் ரவி அறிமுகமான ஜெயம் படத்தில் ஹீரோயின் சதாவின் தங்கையாக நடித்தார். இந்த படம் மூலம் அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். கல்யாணி வளர்ந்த பிறகு, கத்திக்கப்பல், இளம்புயல், இன்பா உள்ளிட்ட படங்களில் நடித்தார். சினிமாவில் பெரிய வெற்றி கிடைக்காத நிலையில், அவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தார். அதன் பிறகு, சில தொலைக்காட்சி சேனல் நிகழ்ச்சிகளில் ஆங்கராகவும் பணியாற்றினார்.

தற்போது திருமணம் செய்துகொண்டு பெங்களூருவில் செட்டில் ஆகிவிட்ட கல்யாணி, ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தான் சினிமாவில் நடிக்க கூடாது என்று முடிவெடுத்ததற்கு காரணம் என்ன என்று கூறியுள்ளார். மேலும், ஒரு தொலைக்காட்சி சேனல் புரோகிராம் ஹெட் தன்னை பப்புக்கு அழைத்தார் என்றும் தனக்கும் மி டூ அனுபவங்கள் உள்ளது என்று கூறியுள்ளார்.

கல்யாணியின் நேர்காணலில், உங்களுக்கு மி டூ அனுபவம் உள்ளதா என்று கேட்கிறார். இந்த கேள்விக்கு கல்யாணி பதில் கூறியதாவது: “நான் கதாநாயகியாக நடிக்கும்போது, எனது அம்மாவுக்கு நிறைய போன்கால் வரும், பெரிய நடிகர், பெரிய படம் உங்கள் மகளைத்தான் ஹீரோயினாக போட ஆசைப்படுறோம். எங்கள் அம்மா உடனே நல்ல விஷயம் கால்ஷீட் டேட் அப்படி பேச ஆரம்பிக்கும்போது அவர்கள், “ஆனால், ஒரு விஷயம் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணனும்” என்று சொல்வார்கள். அம்மா அட்ஜட்மெண்ட்டா என்று சொல்லி போனை துண்டித்துவிடுவார்கள். அதற்குப் பிறகும், நிறைய போன் கால் வரும், எங்கள் அம்மா அவர்களிடம் கடுமையாக பேசிவிட்டு, இது சரிபட்டுவராது இதில் எங்கள் பெண் நடிக்க மாட்டார். இதில் எங்களுக்கு விருப்பமில்லை என்று கூறிவிட்டு உடனடியாக போனைக் கட் பண்ணிவிடுவார்கள். அதற்குப் பிறகுதான் எனக்கு அட்ஜஸ்ட்மெண்ட் என்பதற்கு அர்த்தம் தெரியவந்தது. இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இனிமேல் படங்களே பண்ணக்கூடாது என்று முடிவு செய்தேன்.

அப்படியே படம் நடித்தால் என்னுடைய படத்தில் நடிக்கனும் இல்லாவிட்டால் பண்ணக் கூடாது என்று முடிவு செய்தேன். நான் ஒன்றும் பெரிய நடிகை இல்லை. அதனால், என்னைத் தேடி யாரும் வரமாட்டார்கள். அதனால்தான் இந்த படங்கள் வேண்டாம்னு சொல்லி விலகிவிட்டேன்.

நான் இப்போது ஒன்று சொன்னால் அது சர்ச்சையாகிவிடும். ஒரு தொலைக்காட்சி சேனலில் புரோகிராம் ஹெட். எந்த சேனல் என்று சொல்லமாட்டேன். அவர் டைரக்டராக இருக்கும்போதே தெரியும். அவர் அந்த சேனலுக்கு ஒரு ஷோவுக்கு கூப்பிட்டார். நான் அந்த சேனலுக்கு போய் ஷோ பண்ணேன். அந்த ஷோ எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. இந்த ஷோ நான் ரொம்ப பெரிய கேப்புக்கு பிறகு ஆங்கரிங் பண்ண ஷோ. நான் ரெண்டு மூனு சேனலில்தான் ஆங்கரிங் பண்ணியிருக்கிறேன். அதனால், கண்டுபிடித்துவிடுவார்களோ? கண்டுபிடித்தாலும் பரவாயில்லை. நான் இப்போது இண்டஸ்ட்ரியில் இல்லை.

அப்போது நான் பெங்களூருவில் இருந்தேன். அந்த சேனல் புரோகிராம் ஹெட் எனக்கு ஒரு நாள் போன் செய்து இரவில் பப்பில் சந்திக்க முடியுமா? என்று கேட்டார். நான் மாலையில் காபி ஷாப்பில் பார்கலாம் என்று கூறினேன். எனது கணவர், இவரை அவாய்ட் பண்ணிவிடு என்றார். நானும் அவரை சந்திக்கவில்லை. அதற்குப் பிறகு, அந்த சேனலில் எந்த புரோகிராமுக்கும் என்னை கூப்பிடவில்லை. இது ரொம்ப மோசமான நிகழ்வு. இங்கே திறமைக்கு இடமில்லை? என்று கல்யாணி கூறினார்.

கடந்த ஆண்டு, பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது மி டூ பாலியல் தொல்லை புகார்களைக் கூறினார். அதன் பிறகு, நடிகைகள் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை மி டூ புகார்களைக் கூறிவருகின்றனர். இந்த நிலையில், நடிகை கல்யாணி ஒரு தொலைக்காட்சி சேனல் புரோகிராம் ஹெட் மீது மி டூ புகார் கூறியிருப்பது சினிமா மற்றும் டிவி சேனல்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Actress kalyani poornitha says me too complaint this is reason why she quit cinema

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X