Advertisment

தனிமையில் வாழும் பிரபல நடிகை கனகா.. பூட்டிய வீட்டுக்குள் என்ன செய்கிறார்?

பூட்டிய வீட்டுக்குள் வருடக்கணக்கில் அவர் வசித்து வருவது,

author-image
WebDesk
Sep 24, 2018 12:01 IST
நடிகை கனகா

நடிகை கனகா

பழைய நடிகை கனகா பூட்டிய வீட்டுக்குள் பல வருடங்களாக தனிமையில் வீட்டுக்குள் வசித்து வருகிறது. இதுத தொடர்பாக பல்வேறு செய்திகள் உலா வந்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisment

பூட்டிய வீட்டுக்குள் கனகா:

பழம் பெரும் நடிகை தேவிகாவின் ஒரே மகளான நடிகை கனகா சமீப காலமாக வெளி உலகில் யாருடனும் பழகாமல் தனிமையில் வசித்து வருகிறது. இதனால் அவ்ர் குறித்த தகவகள் மர்மமாகவே உள்ளனர். கனகா முத்துக்குமார் என்ற நபரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டதாக தகவல்கள் பரவினர்.

ஆனால் அதை முற்றிலுமாக மறுத்த கனகா, தனக்கு முத்துகுமார் யார் என்றே எனக்கு தெரியாது கூறினார். கனகாவின் தாய் தேவிகா சினிமாவில் சம்பாதித்த அனைத்து சொத்துக்களும் ஒரே வாரிசு கனகா தான். தனது தாயார் தேவிகா சம்பாதித்து வாங்கிய ஒரு பழைய பங்களாவில்தான் அவர் தற்போது வசித்து வருகிறார்.

ஆனால் சமீப காலமாக கனகா, தனது வீட்டை உர்புறமாக பூட்டிக் கொண்டு தனிமையில் வசித்து வருகிறார். சொத்துக்களை யாராவது பறித்து விடுவார்களோ என்ற பயத்தினால் தான் அவர் யாருடனும் பேசிப்பழகுவது இல்லை என்று அக்கம் பக்கத்தினர் கூறி வருகின்றனர்.

சமீபத்தில் நடந்த ஒரு சினிமா சங்க தேர்தலில் அவர் கலந்து கொண்டு ஓட்டுப்போட்டதாக, அவருடன் நடித்த ஒரு பிரபல கதாநாயகன் கூறினார். “அதன் பிறகு கனகாவை நான் பார்க்கவில்லை” என்று அவர் தெரிவித்தார்.பூட்டிய வீட்டுக்குள் வருடக்கணக்கில் அவர் வசித்து வருவது, அவரை பற்றிய மர்மங்களை மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

#Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment