ராகவா லாரன்ஸ் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கி வரும் சந்திரமுகி 2 படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Advertisment
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த படம் சந்திரமுகி. நயன்தாரா நாயகியாக நடித்த இந்த படத்தில் ஜோதிகா, பிரபு, வடிவேலு, நாசர், சோனு சூத், வினித் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மலையாளத்தில் 90களில் வெளியாகி சக்கைபோடு போட்ட மணிச்சித்திரதாஷ் என்ற படத்தின் ரீமேக்கான சந்திரமுகி தமிழல் வசூல் சாதனை நிகழ்த்தியது.
தற்போது 17 வருடங்கள் கழித்து சந்திரமுகி படத்தின் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. சிவலிங்கா படத்திற்கு பிறகு இயக்குனர் பி.வாசு நடிகர் ராகவா லாரன்ஸ் இணைந்துள்ள இந்த படத்தில் அனுஷ்கா நாயகியாக நடித்து வரும் நிலையில் ராதிகா, வடிவேலு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர்.
சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பை நடிகை கங்கனா ரனாவத் கிளாப்போர்டு அடித்து தொடங்கி வைத்துள்ள வீடியோ பதிவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் "சந்திரமுகி 2 இன் படப்பிடிப்பு இன்று தொடங்கியது" என்று தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
இதனிடையே சந்திரமுகி 2 படத்தில் இணைந்து நடிகை கங்கனா ரனாவத் அழகு மற்றும் நடனத் திறமைக்கு பெயர் பெற்ற ராஜாவின் அரசவையில் நடனமாடும் கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தாம்தூம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான கங்கனா ரனாவத், பல வருட இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டு வெளியான தலைவி படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், சந்திரமுகி படத்தின மூலம் கங்கனா தனது 3-வது தமிழ் படத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்தியின் எமர்ஜென்சி, தேஜஸ், திக் வெட்ஸ் சிறு ஆகிய படங்களில் கங்கனா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“